- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.! எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட அரசு
பள்ளி மாணவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.! எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட அரசு
தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இலவச மடிக்கணினிகள், சைக்கிள்கள், புத்தகங்கள், சீருடைகள் மற்றும் பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள்
தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச மடிக்கணினி திட்டம்: 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன, இதனால் டிஜிட்டல் கல்வியை அணுக முடிகிறது. இலவச புத்தகங்கள் மற்றும் சீருடைகள்: 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பைகள், காலணிகள், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணங்கள் மற்றும் கிரையான்கள் வழங்கப்படுகின்றன.
இலவச சைக்கிள் திட்டம்:
அரசு பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன, இது பள்ளிக்கு வருவதை எளிதாக்குகிறது.
நான் முதல்வன் திட்டம்:
இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம். இதன் மூலம் ஏழ்மையான மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் கல்வி திட்டங்கள்
7.5% இட ஒதுக்கீடு:
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
கல்விக்கடன் தள்ளுபடி:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இலவச காலை உணவு திட்டம்:
அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது, இது ஊட்டச்சத்து மற்றும் கல்வி தொடர்ச்சியை உறுதி செய்கிறது. சிறப்பு ஊக்கத்தொகை: இடைநிற்றலை குறைக்க, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
புதுமை பெண் திட்டம்:
பெண் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. முன்னணி கல்வி நிறுவனங்களில் உதவி: தமிழ்நாடு அரசு 525 மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தை முன்னணி கல்வி நிறுவனங்களில் செலுத்துகிறது, இந்த எண்ணிக்கை 1000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை திட்டம்
இதனிடையே மாணவர்களுக்கு கல்வி உதவிக்தொகை வழங்குவதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன் படி, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், ரூபாய் 1000/- முதல் ரூபாய் 25000/- வரை, கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி உதவி தொகை விண்ணப்பிப்பது எப்படி.?
1) https://scholarships.gov.in என்கிற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு (OTR) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
2) ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில், தங்களுடைய சேமிப்புக்கணக்கானது. தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்..
3) விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.
4) இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்..
5) கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், https://scholarships.gov.in என்ற. தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், முதலில் பதிவு செய்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
பின்பு, மேற்குறிப்பிட்ட வன வலைத்தளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் وان.. அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை, கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்தகட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது.
வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31/08/2025 மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சோ வேண்டிய கடைசி நாள் 31/10/2025.
மேற்கொண்டு விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு அணுகவும்:-
மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா, கிண்டி சென்னை- 600032. மின்னஞ்சல் wclwo.chn-mole@gov.in தொலைபேசி எண்: 044-29530169