- Home
- Tamil Nadu News
- School Holiday: வேறு வழியே இல்லை! இந்த இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
School Holiday: வேறு வழியே இல்லை! இந்த இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தால் சில பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Villupuram Heavy Rain
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக எதிர்பாராத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பதம் பார்த்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு கடந்த 26ம் தேதி முதல் 7ம் தேதி வரை அதாவது சனி, ஞாயிறு விடுமுறை சேர்ந்தது மொத்தம் 12 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடைத்தது.
Villupuram District
நீண்ட நாள் விடுமுறைக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டது. ஆனால், கடும் வெள்ளத்தால் சேதமடைந்த சில பள்ளிகளில் மறுசீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீண்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: டிசம்பர் 13ம் தேதி பள்ளி, கல்லூரி மட்டுமல்ல அரசு அலுவலத்திற்கும் விடுமுறை! வெளியானது அறிவிப்பு!
School Holiday
மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் சிறுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் ஓமந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் நாரவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் கந்தாடு அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் வண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.