- Home
- Tamil Nadu News
- இனி இந்த ஆசிரியர்களுக்கு பள்ளியில் இடம் இல்லை.! உடனே நீக்குங்க- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
இனி இந்த ஆசிரியர்களுக்கு பள்ளியில் இடம் இல்லை.! உடனே நீக்குங்க- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளிகளில் சாதி வன்முறையைத் தடுக்கவும், சாதிய ரீதியாக மாணவர்களைப் பிளவுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் சாதி அடையாளங்களை ரகசியமாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள்
கல்வி தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும். எனவே கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 37,672 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,49,850 ஆசிரியர்கள் உள்ளனர். இது 31,336 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களையும் உள்ளடக்கியது,
இதில் ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.46 ஆசிரியர்கள் உள்ளனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் உணவு சாப்பிடாமல் தவிக்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. மேலும் இடை நிற்றலும் குறைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள்
தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வி உதவித்தொகை, இலவசமாக பேருந்து பயண அட்டை, இலவச மிதிவண்டி, புத்தகம், சீருடை என பல திட்டங்கள் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
இதே போல ஆசிரியர்களுக்கான திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. ஆசிரியர்கள் தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆயுதமாக உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் ஒரு சில இடங்களில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புகாரானது கொடுக்கப்படுகிறது. பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலிலும் ஆசிரியர்கள் ஈடுபடுவதாக கைது செய்யப்படும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.
பள்ளியில் சாதிய ரீதியிலான பிளவு
இந்த நிலையில் பள்ளியில் மாணவர்கள் சாதிய ரீதிய நடந்து கொண்டால் தண்டிக்க வேண்டிய ஆசிரியர்களே சாதிய ரீதியாக மாணவர்களை பிளவுப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பல்வேறு புகார்கள் பள்ளி கல்வி துறைக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் படி பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
மேலும் பள்ளிகளில் சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிபுரிய கூடாது என முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாதிய ரீதியிலான ஆசிரியர் உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சாதிய அடையாளங்கள் வெளியிடாமல் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.