மாணவர்களுக்கு முக்கிய செய்தி.! மாறியது தேதி- புதிய அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை
தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்காக பல்வேறு கல்வியறிவு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், கலை திறமையை வளர்க்கும் வகையில் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.
மாணவர்களுக்கான தேர்வு தேதி
மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க திட்டங்கள் தீட்டப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்காக கல்வி உதவி தொகையையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மாணவர்களுக்கான கலைத்திருவிழா
இதே போல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் மாணவ, மாணவிகளில் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியானது நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் மாணவ,மாணவிகளுக்கு பரதநாட்டியம், சிலம்பம் சுற்றுதல், நாட்டுப் புறப்பாடல், பலகுரல் பேச்சு, மாறு வேட போட்டி, கதை சொல்லுதல், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, நடனம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
மாநில அளவிலான போட்டி
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வட்டார மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மாநில அளவிலான போட்டிகளுக்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மாற்றியமைக்கப்பட்ட மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளின் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி கோயம்புத்தூரில் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட அட்டவணை வெளியீடு
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு திருப்பூரில் டிசம்பர் 6 ஆம் தேதியும், 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈரோட்டில் டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இறுதியாக11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கலைத்திருவிழா நாமக்கல்லில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த போட்டிகளில் முதல் 25 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.