- Home
- Tamil Nadu News
- மாநில அரசு விசாரிக்க தடை..! திமுக அரசை எகிறி அடித்த தவெக.. உச்ச நீதிமன்றம் அதிரடி
மாநில அரசு விசாரிக்க தடை..! திமுக அரசை எகிறி அடித்த தவெக.. உச்ச நீதிமன்றம் அதிரடி
கரூர் கூட்டநெரிசல் விவகாரம் தொடர்பாக மாநில அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தக் கூடாது என்ற தமிழக வெற்றி கழகத்தின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் புதிய குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசு அதிகாரிகள் விசாரிக்க தடை
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமழிக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாமாக இந்த வழக்கில் தலையை கொடுத்த உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி மிஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
மாநில அதிகாரிகள் விசாரிக்க தடை
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக வெற்றி கழகம், “இந்த வழக்கை தமிழக காவல்துறையோ, தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளோ விசாரிக்கக் கூடாது என முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மதுரை கிளையின் வரம்பிற்குள் வரக்கூடிய வரக்கூடிய வழக்கை உயர்நீதிமன்றம் எந்த அடிப்படையில் விசாரித்தது உள்ளிட்ட பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
இந்நிலையில் கரூர் விவகாரம் தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குழுவில் இடம்பெறும் ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்றலாம், ஆனால் அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருக்கக் கூடாது னஎ்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதிகாரிகள் விசாரிக்க தடை
இந்த வழக்கை தமிழக அரசு அதிகாரிகள் விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தமிழக அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.