MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TNSTC: பொதுமக்களுக்கு சூப்பர் செய்தி! இனி ஈஸியாக ஆன்லைனில் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!

TNSTC: பொதுமக்களுக்கு சூப்பர் செய்தி! இனி ஈஸியாக ஆன்லைனில் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!

Transport Department: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு மேலும் எளிதாகியுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 24 2024, 09:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்து கழகங்கள் எட்டு கோட்டங்களின் 26 மண்டலங்கள் மூலம், 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்தடங்களில் 20,232 பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றன. இதில், சாதாரண பேருந்து, சொகுசு பேருந்து, குளிர்சாதன வசதி மற்றும் கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்வோருக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அதன்படி வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதத்திலும் சாதாரண நாட்களில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யும் பயணிகளில் 3 பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3 பயணிகளுக்கும் தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதனால், முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

36

இந்நிலையில் தமிழக பொதுப்போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் (TNSTC) மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியை, ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்திற்காக (OTRS) போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

46

இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) மற்றும் TNSTC பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலி, தினசரி 2,600 பேருந்துகளில் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில் பயணிகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வசதிகளை கொண்டுள்ளது. இது பயணர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் முன்பதிவு செயல்முறையை சீராகக் குறைக்கிறது.

56

மேம்படுத்தப்பட்ட தளத்தின் முக்கிய அம்சங்கள்:

இணைய தளம்:

1. முன்பதிவை முடிக்க குறைவான பக்கங்கள்
2. இருக்கைகள் தேர்வுக்கான கூடுதல் வடிகட்டி(Filters) விருப்பங்கள்
3. அனைத்து பக்கங்களும் பதிலளிக்கும் தன்மையில் (Responsive)
4. அதிகரித்த இருக்கை எண்ணிக்கையில் முன்பதிவுகளை நிறைவேற்ற உயர்வீதம்
கொண்ட இணைய இணைப்பு

கைபேசி செயலி:

1. விருப்பமாக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளை வேகமாக முன்பதிவு முடிக்க

2. மேம்பட்ட பயணர் அனுபவம் 

66

இந்த மேம்படுத்தப்பட்ட முறைகள், தமிழக பொதுப் போக்குவரத்து சேவையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கின்றன. மேலும், பயணிகள் மேம்படுத்தப்பட்ட www.tnstc.in என்ற இணையதளத்திலும் அல்லது TNSTC கைபேசி செயலியினை முக்கிய தளங்களில் பதிவிறக்கவும் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

மேலும், மாநகர் போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த 3 ஓட்டுநர்கள் மற்றும் 11 நடத்துநர்கள் என மொத்தம் 14 இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 3 இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் ஓட்டுநர் உடன் நடத்துநருக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு பேருந்து
தமிழ்நாடு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved