முன்ஜென்மம்,மறுபிறவி இதெல்லாம் உண்மையா.? மகாவிஷ்ணு கூறுவது சரியா? ஆய்வாளர்கள் கூறுவது என்ன
சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆன்மீகப் பிரச்சாரம் செய்து சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் ஒருவரை அவமரியாதை செய்து பேசியதோடு, மாணவர்கள் மத்தியில் மூடநம்பிக்கையை விதைத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் முன் ஜென்மம், மறு பிறப்பு உண்மையா என்பதை அறிவியல் ஆய்வாளர்கள் கூறுவது என்ன.?
மஹா விஷ்ணுவின் முன்ஜென்ம பேச்சு
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஹாட் டாப்பிக்காக இருப்பது மகாவிஷ்ணுவின் பேச்சு தான். கடந்த மாதம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுப்பதற்காக மகாவிஷ்ணு என்பவரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைத்து வந்துள்ளார். அப்போது பள்ளியில் நுழைந்த மகாவிஷ்ணுவிற்கு மாணவர்கள் வரிசையாக நின்று அணிவகுப்புமரியாதை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து பூக்கள் தூவி வரவேற்கப்பட்ட மகாவிஷ்ணு தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு தலைமையாசிரியரோடு அமர்ந்து பேசும் மகாவிஷ்ணு, தலைமை ஆசிரியர்களிடம் என்ன பேச வேண்டும் அதைக் கூறுங்கள். நானாக பேசுவதாக இருந்தால் எதையோ பேசி விடுவேன் என கூறுகிறார். அதற்கு தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு தேவையானதையும் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் பேசுங்கள் என கூறுகிறார்.
ஆசிரியர்- மஹாவிஷ்ணு மோதல்
இதனையடுத்து மேடையில் ஆரம்பத்தில் மாணவர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில் பேசிய மகாவிஷ்ணு அடுத்தடுத்து ஆன்மீகம், கர்மா, முன் ஜென்மம் போன்ற கதைகளை கூறத் தொடங்கினார். கடந்த ஜென்மத்தில் செய்த தவறுதான் இந்த ஜென்மத்தில் கண்பார்வையற்றவர்களாகவும், மாற்றுத்திறனாவும் இருப்பதாகவும் கூறினார். கடவுள் அனைவருக்கும் சமமானவர் என்றால் ஏன் ஒருவர் ஹீரோவாகவும் மற்றவர்கள் வில்லனாகவும் உள்ளார். ஏன் மனிதரிடையே வேறுபாடுகள் உள்ளது. என பேசிக்கொண்டே இருந்தார்.
இதனை கூட்டத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அப்பள்ளியின் ஆசிரியர் சங்கர், மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு பள்ளியில் ஆன்மீகத்தை எப்படி பேசலாம் கர்மா, முன் ஜென்மம் பற்றி எப்படி தவறான தகவலை பரப்பலாம் என அவேசமாக கேள்வி எழுப்பினார்.
என்னை பாராட்ட தான் வேண்டும்
இதனால் பள்ளி வளாகத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவானது. அப்போது ஆசிரியரை மரியாதை குறைவாக பேசும் வகையிலும் மகாவிஷ்ணு செயல்பட்டார். பள்ளியில் ஆன்மீகத்தை பற்றி பேசக்கூடாது என எங்கு சட்டம் உள்ளது? மாணவர்களுக்கு முன் ஜென்மத்தை பற்றி சொல்லிக் கொடுக்க விட்டால் வேறு யார் சொல்லிக் கொடுப்பது என கேள்வி எழுப்பினார். நீங்கள் சொல்லிக் கொடுக்காதது தான் நான் சொல்லிக் கொடுத்துள்ளேன். உங்களை விட நான் சிறப்பாகவே சொல்லிக் கொடுத்துள்ளேன் அதற்கு நீங்கள் என்னை பாராட்ட வேண்டும் எனவும் கூறி இருந்தார்.
teacher shankar
சொந்த காசில் சூனியம்
மேலும் தொடர்ந்து பேசிய மகாவிஷ்ணு மாவட்ட கல்வி அலுவலரை விட நீங்கள் உயர்ந்தவரா.? என சரமாரியாக திமிராக கேள்வி எழுப்பினார். இதற்கு ஆசிரியர் சங்கரும் அனைவரும் சமம் என சளைக்காமல் பதிலளித்தார். அங்கு கூடியிருந்த ஆசிரியர்கள் மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆசிரியர் சங்கரையே சமாதானம் செய்ய முயன்றார்கள். இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பாக வெளியில் எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. ஆனால் பரம்பொருள் என்று அறக்கட்டளை நடத்தி வரும் மகாவிஷ்ணு சொந்தக் காசிலேயே சூனிய வைக்கும் வகையில் தனது youtube பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்து தற்பெருமை அடித்துக் கொண்டார். ஆசிரியரை நோஸ்கட் செய்தது போல் தலைப்பும் வைத்திருந்தார்.
மஹா விஷ்ணுவிற்கு எதிராக தமிழக அரசு
இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மகாவிஷ்ணுவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் களத்தில் இறங்கிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எனது ஏரியாவுக்குள் வந்து எனது ஆசிரியரை விமர்சித்து பேசி சென்ற உன்னை சும்மா விட மாட்டேன் என கூறி இருந்தார். அமெரிக்காவிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலினும் ஆசிரியருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தார். அடுத்தடுத்து எழுந்த எதிர்ப்பால் அரண்டு போன மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் தியான ஆன்மீக வகுப்பு எடுத்திருந்த நிலையில் சென்னை திரும்புவதாகவும் சென்னை வந்து மக்களிடம் நான் பேசிய தொடர்பாக விளக்கம் அளிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.
Ashok Nagar School
அறிவியல் கருத்து இல்லை
நான் எந்தவித தவறாகவும் பேசவில்லை என்றும் இது தொடர்பாக அமைச்சர் சந்தித்து விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதே போல நேற்று விமான நிலையம் வந்து இறங்கிய மகாவிஷ்ணுவை சுற்றிவழைத்த போலீசார் விசாரணைக்காக சைதாப்பேட்டைக்கு அழைத்து சென்று கைது செய்தனர். மாணவர்கள் மத்தியில் மூட நம்பிக்கை விதைத்ததாகவும் ஆசிரியர்களை தவறாக பேசியதாகும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மகாவிஷ்ணு பேசியது அறிவியல் பூர்வமாக இல்லை என்றும் சும்மா அவர் பேசியது அனைத்துமே கட்டுக்கதை என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது விமானம் முதல் சமூகவலைதளத்தில் மூலம் பேசுவது எல்லாமே அறிவியல் தான்.
கொல்லக்கூடிய சக்திகள்
ஆனால் அறிவியலை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒரு மந்திரம் சொன்னால் பறக்கலாம். நெருப்பு வரும் என கூறுவது எல்லாம் பொய்யான தகவல், குண்டலனி, சக்ரா என்பது ஆன்மிகம், இது மருத்துவத்திற்கு தொடர்பு இல்லை. பிரபஞ்ச சக்தி, யூனிவர்ஸ் எல்லாம் நன்மை தான் தரும் என கூறுவது எல்லாம் உருட்டு தான். ஒரு 5 நிமிடம் பூமியில் இருந்து மேலே சென்றாலே உடல் பாதிப்பு ஏற்படும். சூரியன் வரும் வெளிச்சம் ஆபத்து தான். பூமியில் இருக்கிற ஒரு அமைப்பு நம்மை காப்பாற்றி வருகிறது. பிரபஞ்சத்தில் வருகின்ற சக்திகள் அனைத்தும் நல்லது என கூறுகிறார். பிரபஞ்சத்தில் இருந்து வருகிற அனைத்தும் கொல்லக்கூடியது தான். பூமியை தாண்டி மனிதன் மேலே சென்றாலே அங்கிருக்க கூடிய கதிர்கள் , ரேடியேசன், ஆக்சிஜன் இல்லாமல் வாழவே முடியாது.
முன் ஜென்மம் உண்மையா.?
விந்துவை வெளியேற்றாமல் 12வருடம் கட்டுப்படுத்துவானோ அதனை நெற்றியில் கொண்டு வந்து நிறுத்துகிறானோ அவன் உடல் கோர் டெம்பரேஜர் மாறிவிடும் என கூறுகிறார். விந்து வெளியேறுவது இயற்கையான நிலை. சில நாட்களுக்கு ஒரு முறை வரும். இதனை உளவியல் மருத்துவர்கள் கேளுங்கள். இது போன்ற நபர்களிடம் கேட்காதீர்கள் என தெரிவித்துள்ளார். இது எல்லாம் மாத்திரை, மருந்துகள் விற்பனைக்கு தான் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்மா, முன்ஜென்மம் என்று கூறுவது தீவிரமான உளவியல் பிரச்சனையை கொண்டு வருகிறது. சமூகத்தில் பின்னடைவை கொண்டு வருகிறது. மறு பிறப்பு கர்மா போன்றவை மனிதனிடம் இரக்க குணத்தை குறைக்கிறது. ஒருவர் ஏழையாக இருக்கிறார். பார்வையில்லாமல் இருக்கிறார் என்பதனாலையே அவர்கள் மீது பாவம் வராமல் போன ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்திருப்பார் என நிலை உருவாகிவிடும்.
கட்டுக்கதைகள் தான்
இது நல்ல கற்பிப்பாக எப்படி இருக்கும். அதே பள்ளியில் ஏழ்மையான நிலையில் மாணவர்கள் உள்ளார்கள் அவர்கள் ஏழையாக இருப்பதற்கு முன் ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவம் என கூறும்போது அவர்களின் மன நிலை எப்படி இருக்கும். இதனால் தான் அம்மா அப்பா ஏழ்மையாக இருக்கிறார்கள் என குற்ற உணர்வு தோன்றி விடும் என கூறும் அறிவியல் ஆய்வாளர்கள் இது எல்லாம் உருட்டுக்கள் என கூறுகின்றனர்.