MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • DMK: விழுப்புரம் மாவட்டத்தில் திமுக தோல்விக்கு இதுதான் காரணமா? அம்பலப்படுத்திய தொண்டர்கள்!

DMK: விழுப்புரம் மாவட்டத்தில் திமுக தோல்விக்கு இதுதான் காரணமா? அம்பலப்படுத்திய தொண்டர்கள்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெகவிடம் திமுக ஆட்சியை இழந்தது. விஜய்யின் அரசியல் வருகை ஒருபுறம் இருந்தாலும், கட்சியின் மாவட்ட செயலாளர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளும், அடிமட்ட தொண்டர்களைப் புறக்கணித்தும் முக்கிய காரணம்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 16 2026, 04:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தனிப் பெரும்கட்சியான தவெக
Image Credit : Asianet News

தனிப் பெரும்கட்சியான தவெக

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்த தவெக யாரும் எதிர்பாராத வகையில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்தது. இதன் முலம் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக திராவிட கட்சிகள் தலைமையில் இல்லாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக 59 இடங்களில் மட்டுமே வென்று இரண்டாவது இடத்திலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 47 இடங்களை பிடித்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மாவட்ட செயலாளர்கள் கவுதம சிகாமணி, மஸ்தான்
Image Credit : our own

மாவட்ட செயலாளர்கள் கவுதம சிகாமணி, மஸ்தான்

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, திருக்கோவிலூர் என 5 தொகுதியில் திமுக போட்டியிட்டது. இதில் விழுப்புரம், வானூர் என 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. ​கடுமையான உழைப்பையும், ஓட்டுக்கு ரூ.1000 முதல் 1500 கொடுத்தும் 3 தொகுதியில் திமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக திருக்கோவிலூர், செஞ்சி தொகுதியில் கட்சியின் மாவட்ட செயலாளர்களாக உள்ள கவுதம சிகாமணி, மஸ்தான் ஆகியோர் போட்டியிட்டு தோல்வியைத் சந்தித்தனர்.

Related Articles

Related image1
Astrologer: தவறு நடந்தால் பதவியை தூக்கி எறிவார்! விஜய் ஆட்சி கவிழுமா? 2028 வரை இருக்கும் சவால்கள்! ஜோதிடர் கணிப்பு!
Related image2
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
35
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் லட்சுமணன் வெற்றி
Image Credit : our own

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் லட்சுமணன் வெற்றி

விழுப்புரத்தில் போட்டியிட்ட லட்சுமணன் கடும் போட்டிகளுக்கு இடையே மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். ​விஜய் அரசியல் வருகையே தமிழகம் முழுவதும் திமுகவின் தோல்விக்கு காரணம். இது ஒருபுறம் இருந்தாலும், 76 ஆண்டு கால வலுவான கட்டமைப்பைக் கொண்ட திமுகவின் தோல்விக்கு இது மட்டுமே காரணம் இல்லை என கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

45
அடிமட்ட தொண்டர்களின் குமுறல்
Image Credit : our own

அடிமட்ட தொண்டர்களின் குமுறல்

அதாவது திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் அதிருப்தி நிர்வாகிகள் சிலர் தங்களது மனவேதனையையும், தோல்விக்கான உண்மையான காரணங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர். கட்சித் தலைமை உடனடியாக தலையிட்டு மாற்றங்களைச் செய்யாவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

கட்சியில் மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் தலைமை, அதற்கு அடுத்தபடியாக இருக்கும் மாவட்ட அவைத் தலைவர் போன்ற முக்கியப் பதவிகளை நியமிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அனைத்து அதிகாரங்களையும் மாவட்ட செயலாளர்களிடமே விட்டுவிடுகிறது. பல ஆண்டுகளாகக் கட்சிக்காகக் உழைத்த, தகுதியான தொண்டர்களைப் புறக்கணித்துவிட்டு, தங்களது சொந்த விசுவாசிகளுக்கும், தங்களின் வீடுகளில் வேலை செய்பவர்களுக்கும் மட்டுமே மாவட்ட செயலாளர்கள் கட்சிப் பதவிகளை வாரி வழங்கியுள்ளனர். அரசு ஒப்பந்தப் பணிகளை (Contract Works) பிரித்துக் கொடுக்கும் முழு அதிகாரமும் மாவட்ட செயலாளர்களிடமே இருந்தது. அவர்கள் கட்சி வளர்ச்சிக்காக உழைத்தவர்களுக்குப் பணிகளைப் பகிர்ந்தளிக்கவில்லை. மாறாக, தங்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் தங்களது சொந்த பினாமிகள் மூலமாகவே அனைத்து ஒப்பந்தங்களையும் எடுத்துக்கொண்டனர்.

55
தோல்விக்கு மிக முக்கிய காரணம் இதுதான்
Image Credit : Asianet News

தோல்விக்கு மிக முக்கிய காரணம் இதுதான்

இதனால் ஒன்றிய செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு எந்தவித வருவாயும் கிடைக்காமல் போனது. இந்த தொடர் புறக்கணிப்பால் ஏற்பட்ட மனக்குமுறலைத்தான் கட்சியினர் தேர்தல் நேரத்தில் தங்களது மௌன எதிர்ப்பாகக் காட்டிவிட்டனர். மாவட்ட செயலாளர்களின் இத்தகைய தன்னிச்சையான செயல்பாடுகளைக் கட்சித் தலைமை தட்டிக்கேட்டுக் கண்காணிக்கத் தவறிவிட்டது. அதேபோல், அடிமட்ட தொண்டர்களின் நியாயமான கருத்துகளையும் கேட்காமல் புறந்தள்ளியதுதான் இந்த தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என கூறியுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
திமுக
மு. க. ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம்.. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
Recommended image2
Now Playing
உருகிய முத்துக்காளை! என் மனைவிக்கு உதவுங்க CM விஜய் அண்ணா.. கண்ணீர் கோரிக்கை!
Recommended image3
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
Related Stories
Recommended image1
Astrologer: தவறு நடந்தால் பதவியை தூக்கி எறிவார்! விஜய் ஆட்சி கவிழுமா? 2028 வரை இருக்கும் சவால்கள்! ஜோதிடர் கணிப்பு!
Recommended image2
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved