MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Ration Card : ரேஷன் கார்டு அப்டேட் பண்ண சூப்பர் வாய்ப்பு! சென்னையில் நடக்கும் சிறப்பு முகாம்!

Ration Card : ரேஷன் கார்டு அப்டேட் பண்ண சூப்பர் வாய்ப்பு! சென்னையில் நடக்கும் சிறப்பு முகாம்!

Ration Card : சென்னையில் அக்டோபர் 10-ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மற்றும் மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Oct 08 2026, 08:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சென்னையில் சனிக்கிழமை ரேஷன் குறைதீர் முகாம்!
Image Credit : Asianet News

சென்னையில் சனிக்கிழமை ரேஷன் குறைதீர் முகாம்!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான சேவைகளை எளிதாக வழங்கவும், அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டுத் தீர்வு காணவும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, அக்டோபர் மாதத்துக்கான மக்கள் குறைதீர் முகாம் வரும் அக்டோபர் 10-ம் தேதி சனிக்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Salt : டேபிள் சால்ட் vs இந்துப்பு! எது பெஸ்ட்? எது உடலுக்கு நல்லது?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கணுமா? நீக்கணுமா?
Image Credit : pinterest

ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கணுமா? நீக்கணுமா?

குடும்ப அட்டையில் பெயர் தொடர்பான மாற்றங்களைச் செய்ய விரும்புபவர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்ய வேண்டியவர்களும் முகாமில் தங்களது கோரிக்கையைத் தெரிவித்து தேவையான நடவடிக்கைகளைப் பெறலாம்.

இதையும் படிங்க : Milk Peda : பால் கோவா கஷ்டப்பட்டு கிண்ட வேண்டாம்! பால் பவுடரில் ஈஸியா பேடா செய்யலாம்!

36
மொபைல் எண்ணையும் மாற்றலாம்!
Image Credit : pinterest

மொபைல் எண்ணையும் மாற்றலாம்!

குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணை மாற்ற வேண்டும் என்றாலும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம். கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் இங்கு மேற்கொள்ளப்படும்.

குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் மூலமாக, அதாவது OTP மூலம் மட்டுமே சேவைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியைத் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

இதையும் படிங்க : Aippasi : நல்ல காலம் பொறக்குது! ஐப்பசி பிறந்ததும் வேற லெவலில் சம்பவம் பண்ணப்போகும் 5 ராசிகள்!

46
ரேஷன் கடை மீது புகார் இருக்கா?
Image Credit : Asianet News

ரேஷன் கடை மீது புகார் இருக்கா?

நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றையும் இந்த மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். அதேபோல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலும் புகார் அளிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Leftover Rice Cutlet : மீந்த சாதத்தில் மொறுமொறு கட்லெட்! ஈஸியான மாலை நேர ஸ்நாக்ஸ்!

56
முதியவர்களுக்கு முக்கியமான வசதி!
Image Credit : our own

முதியவர்களுக்கு முக்கியமான வசதி!

நியாய விலைக் கடைக்கு நேரில் சென்று பொருட்களைப் பெற முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். இதனால், நேரில் வருகை தர இயலாதவர்கள் தொடர்பான தேவையான நடவடிக்கைகளுக்கும் இந்த முகாம் உதவியாக இருக்கும். குடும்ப அட்டை மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : Glass Idli : இட்லி தட்டு வேண்டாம்! டம்ளரில் பஞ்சு மாதிரி இட்லி செய்வது எப்படி?

66
அக்டோபர் 10-ம் தேதி எங்கே செல்ல வேண்டும்?
Image Credit : Asianet News

அக்டோபர் 10-ம் தேதி எங்கே செல்ல வேண்டும்?

சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

தேதி: 10.10.2026, சனிக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை

குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு தொடர்புடைய மண்டல அலுவலகத்துக்குச் சென்று இந்தச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முக்கியமாக, சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் OTP மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால், அந்த கைபேசியை உடன் எடுத்துச் செல்வது அவசியம்.

இதையும் படிங்க : Deepavali Offers : தங்க நகை முதல் டிவி, ஃப்ரிட்ஜ் வரை! தீபாவளிக்கு எங்கெல்லாம் தள்ளுபடி? முழு லிஸ்ட்!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
குடும்ப அட்டை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Recommended image2
Now Playing
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
Recommended image3
Now Playing
முரசு புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சியின் ICCC மையம் மூலம் தீவிர கண்காணிப்பு!
Related Stories
Recommended image1
UPI : சூப்பர் செய்தி! ₹2,000க்கு மேல் UPI செய்தால் கட்டணம் இல்லையா? தள்ளிப்போகிறதா புதிய கட்டணம்?
Recommended image2
LPG Cylinder : 3000 ரூபாயை நெருங்கும் சிலிண்டர் விலை! என்ன காரணம்? மேலும் உயருமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved