School Holiday: பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! எத்தனை நாட்கள் தெரியுமா?
Quarterly Exam Holidays Extension: தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் சங்கத்தினர் விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே வாரத்தில் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்க திட்டமிட்டு அட்டவணை தயார் செய்யப்பட்டது. அதாவது செப்டம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கடைசி தேர்வு முடிந்து சனிக்கிழமை முதல் காலாண்டு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தமுறை 5 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது.
school holiday
அதன்படி, செப்டம்பர் 28 சனிக்கிழமை, 29 ஞாயிறு, செப்டம்பர் 30 திங்கள், அக்டோபர் 1 செவ்வாய், அக்டோபர் 2 புதன் ஆகியவையாகும். இதில் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்து விடுகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. அப்படி பார்த்தால் காலாண்டு தேர்வு விடுமுறை 2 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை 9 நாட்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
School Teacher
அதில், தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், காலாண்டுத் தேர்வுக்குப் பிறகு வழங்கப்படும் விடுமுறையானது, முந்தைய ஆண்டுகளில் 9 நாள்கள் விடப்பட்டன. ஆனால் நடப்பாண்டில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அக்டோபர் 4, 5 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டித்தால் போதும் சனி, ஞாயிறுடன் சேர்த்து 9 நாட்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறையாக மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும், காலாண்டுத் தேர்வுக்குப் பின் அளிக்கப்படக் கூடிய விடுமுறையில் தான் மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டியுள்ளது. அவற்றை சரிபார்த்து எமிஸ் இணையத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். என கூறியிருந்தனர்.
anbil mahesh
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது காலாண்டு விடுமுறையை நீட்டித்து தர வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் கூறியிருந்தார். இந்நிலையில், காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
School Education Department
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 07.10.2024 (திங்கட் கிழமை) அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.