கை நிறைய கொட்டும் பணம்.! பேக்கரி தொடங்க அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழ்நாடு அரசு, சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவோருக்காக அட்வான்ஸ் பேக்கரி தயாரிப்புகள் தயாரித்தல் பயிற்சியை வழங்குகிறது. சென்னையில் நான்கு நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், பல்வேறு கேக் வகைகள், பீட்சா, பர்கர் தயாரிப்பு கற்றுத்தரப்படும்.

சொந்தமாக தொழில் தொடங்க சூப்பர் சான்ஸ்
தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தொழில்கள் தொடங்கப்படுகிறது. இதன் காரணமாக பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது.
அந்த வகையில் சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்காகவும் பயிற்சி வழங்கி கடன் உதவி திட்டங்களையும் செயல்படுத்துகிறது. அந்த வகையில் அட்வான்ஸ் பேக்கரி தயாரிப்புகள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புதுமை நிறுவனம் சென்னை அலுவலகத்தில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் — அட்வான்ஸ் பேக்கரி தயாரிப்புகள் தயாரித்தல் பயிற்சி வழங்கவுள்ளது. வரும் 28.10.2025 முதல் 31.10.2025 வரை, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்
இந்தப் பயிற்சியில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், பிராண்ட் உருவாக்கம், மற்றும் பின்வரும் வகை தயாரிப்புகள் பற்றிய பயிற்சி அளிக்கப்படும்:
ப்ரூகீஸ், டிரிபிள் சாக்லேட் ப்ரவுனி, நுபைல்லா ப்ரவுனி, கருப்புக்காவுனி மில்லெட்ஸ் ப்ரவுனி, ப்ளாண்டி, பிரெஞ்ச் மாக்ரூன்கள், லாவா கேக், சீஸ் கேக், டிரஸ் பிளஸ் கேக், ட்ரீம் கேக், மில்க் கேக், குராச்சான்ட், பிரெட் பவுல் பேக், திருவைண கேக், லேயர் கேக், சாக்லேட் ட்ரஃபில், கேக் பாப்ஸ், ஐசிங் தொழில்நுட்பங்கள், ஃபாண்டன்ட் அடிப்படையிலான பண்ணிங், கிரீம் வகைகள் மற்றும் ஃப்ராஸ்டிங் நுட்பங்கள் ஆகியவற்றிலும் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், பீட்சா, பஃப், நட், பர்கர் போன்ற வணிக உற்பத்தி பொருட்களை எவ்வாறு தயாரிப்பது என்பதையும் விளக்கப்படும்.
சொந்த தொழில் தொடங்க சலுகைகள்
பயிற்சியின் போது, தொழில்முறை உபகரணங்களின் பயன்பாடு, பாக்கிங், லேபிளிங் மற்றும் தரச் சான்றிதழ் முறைகள் போன்றவையும் கற்பிக்கப்படும்.
அத்துடன், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் சலுகைகள் பற்றியும் விளக்கப்படும்.
தகுதி
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் தொழில் முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடையவராகவும் இருக்க வேண்டும்.
விடுதி வசதி
பயிற்சியில் பங்கேற்கும் பயிலாளர்களுக்காக குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முன்பதிவு அவசியம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்
மேலும் விவரங்களுக்கு மற்றும் பதிவு செய்ய: இணையதளம்: www.editn.in
அலுவலக முகவரி:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புதுமை நிறுவனம் (EDII-TN) சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காடுதாங்கல், சென்னை – 600 032. தொடர்பு எண்கள்: 8668102600 / 8072914694