MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 38 ஆயிரம் காலிப்பணியிடம்.! நாளை இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- தமிழக அரசு அழைப்பு

38 ஆயிரம் காலிப்பணியிடம்.! நாளை இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- தமிழக அரசு அழைப்பு

தமிழகத்தில் பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தென்காசி, உதகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன; ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Mar 07 2025, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Job fair in tamilnadu : தமிழக அரசு சார்பாக வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் முகாம் நடைபெறுகிறது.

அந்த வகையில் ,  பெரம்பலூர் மாவட்டத்தில் 08,03,2025 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி), தண்ணீர்பந்தல், பெரம்பலூர் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

26
பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. மேலும் சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் சுயதொழில் உருவாக்கும் திட்டம் ஆலோசனைகள் வழங்கப்படும்.

கல்வித் தகுதிக்கேற்ப தனியார் துறை வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10000/- முதல் 20000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதியாக 8ஆம் வகுப்பு முதல் 10,12 ஆம் வகுப்பு (தேர்ச்சி / தோல்வி) பட்டயப்படிப்பு (Diploma) தொழிற்கல்வி (ITI) மற்றும் பட்டப்படிப்பு (Any Degree) பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

36
கிருஷ்ணகிரியில் இளைஞர்களுக்கு ஜாக்பாட்

கிருஷ்ணகிரியில் இளைஞர்களுக்கு ஜாக்பாட்

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 08.03.2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை சாலை, கிருஷ்ணகிரி வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்,  5,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கி கடன் குறித்த வழிகாட்டப்படவுள்ளது. 

கல்வித்தகுதியாக 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ஐ.டி.ஐ./டிப்ளமோ/நர்சிங் பார்மஸி/பொறியியல், மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கிருஷ்ணகிரி

46
தென்காசியில் வேலைவாய்ப்பு

தென்காசியில் வேலைவாய்ப்பு

 தென்காசி மாவட்டத்தில் 08.03.2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சி, தென்காசி. வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 3,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது, சுயதொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் குறித்து விளக்கப்படும். மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில்  18 வயது முதல் 35 வயது உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.  எட்டாம் வகுப்புகள் முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ./ டிப்ளமோ/ நர்சிங்/பொறியியல்/ஆசிரியர்கள் பங்கேற்கலாம்

56
உதகையில் வேலைவாய்ப்பு முகாம்

உதகையில் வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் 08,03,2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி பிங்கர் போஸ்ட் உதகை வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 10,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள், நீலகிரி,  கோவை திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு 

கல்வித்தகுதிகள்

8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ஐ.டி.ஐ./டிப்ளமோ/நர்சிங் பார்மஸி/பொறியியல்

மேலும் விவரங்களுக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம், நீலகிரி மாவட்டம், 0423-2444004, 7200019666

66
புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு

புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 08.03.2025 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதில் 10,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் தேர்வு செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு  அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதிகள்

* 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ஐ.டி.ஐ./டிப்ளமோ/நர்சிங் பார்மஸி/பொறியியல்

அனுமதி இலவசம்

மேலும் விவரங்களுக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்..! மதுரையில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்
Recommended image2
சட்டமன்ற தேர்தல்: காரைக்குடியில் போட்டியிடுகிறார் சீமான்..! 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம்
Recommended image3
சாதாரண டீக்கடை வைத்திருந்த ஓபிஎஸ்! மக்கள் பார்த்துட்டு இருக்காங்க! இறங்கி அடிக்கும் செல்லூர் ராஜு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved