தக்காளி, வெங்காயம் ஒரு கிலோ இவ்வளவுதானா.? போட்டி போட்டு அள்ளும் மக்கள்
சமையலில் முக்கிய காய்கறிகளான தக்காளி, வெங்காயம் விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டனர். தற்போது கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமையலுக்கு ருசியை கொடுக்கக்கூடியது காய்கறிகள். அந்த வகையில் காய்கறிகள் சந்தையில் இல்லத்தரசிகள் தினந்தோறும் காய்கறிகளை வாங்குகிறார்கள். அதில் முக்கியமான காய்கறிகள் என்று பார்க்கும் போது தக்காளி மற்றும் வெங்காயம் கண்டிப்பாக இடம்பெறும். எனவே இந்த இரண்டு காய்கறிகள் மட்டும் இல்லையென்றால் இல்லத்தரசிகளின் நிலைமை பரிதாபம் தான். எனவே மற்ற காய்கறிகளை வாங்குவதை விட தக்காளி, வெங்காயத்தை அதிகளவு வாங்குவார்கள். ரசம், சாம்பார், மீன் குழம்பு, அவியல், சட்னி என சமைத்தாலும் இந்த இரண்டும் இல்லையென்றால் ருசியும் கொடுக்காது, உணவும் சிறக்காது.
தக்காளி மற்றும் வெங்காய் விலை
எனவே மாத பட்ஜெட்டில் தக்காளி, வெங்காயத்திற்கு என ஒரு தொகை ஒதுக்க வேண்டும். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து குறைந்து இருந்ததால் விலையானது புதிய, புதிய உச்சத்தை தொட்டது. அதன் படி ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும், வெங்காயம் 120 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தான் கூடுதல் தொகை கொடுத்து வாங்க முடியாமல் மக்கள் திணறினார்கள். மாத பட்ஜெட்டில் தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு என அதிக பணம் தேவைப்பட்டது. எனவே எப்போது தக்காளி வெங்காயம் விலை குறையும் என மக்கள் காத்திருந்தனர்.
100 ரூபாய்க்கு எத்தனை கிலோ.?
அதற்கு ஏற்றார் போல் சென்னை கோயம்பேடு சந்தைக்கு லாரி லாரியாக தக்காளி மற்றும் வெங்காயம் மூட்டை மூட்டையாக வந்திறங்குகிறது. இதனால் விலையானது சரசரவென சரிந்துள்ளது. அந்தவகையில் 100 ரூபாய்க்கு 6 முதல் 7 கிலோ வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயமானது 100 ரூபாயக்கு 3 முதல் 4 கிலோ வரை விற்பனையாகிறது. இதனால் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பச்சை காய்கறிகள் விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறைந்தது காய்கறி விலை
பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 40 ரூபாய்க்கும், புடலங்காய் 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது