MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மூட்டை மூட்டையாக வந்த தக்காளி,வெங்காயம்.! போட்டி போட்டு அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

மூட்டை மூட்டையாக வந்த தக்காளி,வெங்காயம்.! போட்டி போட்டு அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. காரிப் பருவ காய்கறிகள் வரத்தால் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Feb 11 2025, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மூட்டை மூட்டையாக வந்த தக்காளி,வெங்காயம்.!ஒரு கிலோ இவ்வளவு தானா!!

மூட்டை மூட்டையாக வந்த தக்காளி,வெங்காயம்.!ஒரு கிலோ இவ்வளவு தானா!!

காய்கறிகள் தான் சமையலில் முக்கிய இடம் பிடிக்கிறது. ரசம் முதல் பிரியாணி வரை தக்காளி, வெங்காயத்தின் தேவை அதிகமாக உள்ளது. அந்த வகையில் அசைவ உணவுகளுக்கு இணையாக காய்கறிலும் பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுப்படுகிறது. இந்த நிலையில் தான் காய்கறிகளின் விலை ஒரு நேரத்தில் உயர்ந்தால் அடுத்த சில வாரங்களில் சரியும்.

அதே போல தான் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் வீடுகளில் தக்காளி, வெங்காயம் சார்ந்த உணவுகளை சமைப்பதை தவிர்த்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
உச்சத்தை தொட்ட காய்கறி விலை

உச்சத்தை தொட்ட காய்கறி விலை

இருந்தாலும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமையல் என்பது இயலாத காரியம் என்பதால் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உருவானது. எனவே மாத பட்ஜெட்டில் காய்கறிகளுக்கு என கூடுதலாக பணம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே எப்போது காய்கறிகளின் விலை குறையும் என பொதுமக்கள் காத்திருந்தனர்.

அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தற்போது விலையானது சரசரவென குறைந்துள்ளது. காரிப் பருவ காய்கறிகளின் வரத்தின் காரணமாக விலையானது குறைந்து வருகிறது. இதன் படி ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும், வெங்காயம் 20 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

35
காரிப் பருவ காய்கறிகளின் வரத்து அதிகரிப்பு

காரிப் பருவ காய்கறிகளின் வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக இல்லத்தரசிகள் அதிகளவு தக்காளி மற்றும் வெங்காயத்தை பை நிறைய வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

45
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

பச்சை காய்கறிகளின் விலை என்ன.?


வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்   வெள்ளரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  கத்தரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

55
காய்கறிகளின் விலை நிலவரம்

காய்கறிகளின் விலை நிலவரம்

 பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image2
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved