- Home
- Tamil Nadu News
- மக்களே எந்த வேலையாக இருந்தாலும் கரெக்டா 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! நாளை மின்தடை ஏற்படும் ஏரியாக்கள் அறிவிப்பு!
மக்களே எந்த வேலையாக இருந்தாலும் கரெக்டா 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! நாளை மின்தடை ஏற்படும் ஏரியாக்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும். கோவை, கடலூர், விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு பணி
தமிழகத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு நிமிடம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே போன் செய்து எப்போது கரண்ட் வரும் கேட்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அன்றைய தினம் சிறு பழுதுகள், மரக்கிளைகள் அப்புறப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவர். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
கோவை
கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம், சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, கே.என்.ஜி.புதூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
கடலூர்
நல்லாத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி, நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வாரகல்பட்டு, எஸ் புதூர், திருப்பாபுலியூர், கிருஷ்ணாபுரம், சிற்றரசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பிநாதன்குப்பம், மேல்பட்டினம்பேட்டை, கீழ்கவரப்பட்டு, மேல்குமாரமங்கலம், கொங்கராயனூர், பகண்டை, அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர்.ஜா எண்டல், எம் பாரூர், எருமானூர், ரெட்டிக்குப்பம், கோணங்குப்பம், எடச்சித்தூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
விருதுநகர்
பல்லடம்
பனபாளையம், ராயர்பாளையம், மாதேஸ்வரன் நகர், திருப்பூர் சாலை, சிங்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
விருதுநகர்
பாறைப்பட்டி - பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணபுரம், சிவகாசி நகர், கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.
விழுப்புரம்
எலமங்கலம், வடசிறுவளூர், ரெட்டனை, புலியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், உரல், கொல்லர், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
மேற்கு தம்பரம்
சிடிஓ காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், சசி வரதன் நகர், எஃப்சிஐ நகர், காசா கிராண்ட், குட் வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர் மற்றும் ராமகிருஷ்ணா நகர்.
ஈஞ்சம்பாக்கம்
விஜிபி லேஅவுட் & சீத்தாரம் அவென்யூ, பெரியார் தெரு, பொதிகைஸ்ட்ரீட், முனிசுவரன் கோவில் தெரு, கௌரியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, ஷாலிமார் தோட்டம், எம்.கே. ராதா அவென்யூ & ரேடியன்ட் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.