- Home
- Tamil Nadu News
- Power Cut in Tamilnadu: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Power Cut in Tamilnadu: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
தமிழகம் முழுவதும் தடையில்லாத மின்சாரம் வழங்கும் வகையில் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் சிறு சிறு பழுதுகள், மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை வெட்டுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்க்கலாம்.
கோவை
கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
உடுமலைப்பேட்டை
முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாசகோலனி, எம்.என்.பாளையம்.வாலைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

