பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை.! தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சிக்கு 18 சிறப்பு ரயில்கள் சேவை தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
pongal celebration
பொங்கல் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. எனவே பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். எனவே வேலைக்காக சொந்த ஊரை விட்டு லட்சக்கணக்கான மக்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள். எனவே தொடர் விடுமுறை நாட்கள் அல்லது விஷேச நாட்களில் மட்டும் வெளியூருக்கு செல்வார்கள். எனவே இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு 6 முதல் 9 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
pongal special train
சிறப்பு ரயில் அறிவிப்பு
எனவே பொங்கல் பண்டிகையை கொண்டாட ஊருக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். ஏற்கனவே ரயில் மற்றும் பேருந்துகளில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்ட நிலையில், புதிதாக எப்போது சிறப்பு பேருந்து மற்றும் ரயில் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக திருச்சிக்கு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Trichy train
சென்னை டூ திருச்சி
பொங்கல் பண்டிகையொட்டி தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கும் 18 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதன்படி( 06190 )ரயில் எண் திருச்சிராப்பள்ளியில் இருந்து தாம்பரத்திற்கு ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது.
special train reservation
தொடங்கியது முன்பதிவு
இதே போல (ரயில் எண் 06191) தாம்பரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கும் மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி 9 ரயில் சேவை என இயக்கப்படுகிறது.இந்த ரயிலில் இரண்டு ஏசி வகுப்பு பெட்டியும், 12 உட்கார்ந்து செல்லும் வகையில் சேர்கார் பெட்டியும், இரண்டு சரக்கு வண்டியும் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை சென்று சேர்கிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறப்பட்டுள்ளது.