- Home
- Tamil Nadu News
- மாணவர்களுக்கு பள்ளித் தேர்வு இறுதி நாள்! கண்டிப்பா இதை செய்யணும்! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மாணவர்களுக்கு பள்ளித் தேர்வு இறுதி நாள்! கண்டிப்பா இதை செய்யணும்! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Tamilnadu Government school: தமிழகத்தில் 12, 11, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு முடியும் நாளில் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் காவலர்களை ஈடுபடுத்த உத்தரவு.

Tamilnadu Public Exam
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைகிறது.
School Student
அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில் வருகிற மார்ச் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைனயடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!
school education department
இந்நிலையில், 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடியும் கடைசி நாள் அன்று பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளூர் காவல் நிலையம் மூலம் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
TN School Student
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: தமிழகத்தில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் முடியும் நாளன்று, மாணவர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டுச் செல்ல வேண்டும். இதற்காக பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் காவலர்களை பாதுகாப்பு பணிக்கு அமர்த்த வேண்டும்.
Last Exam Date
மேலும், தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தேர்வு முடியும் நேரத்தில் வருகை புரிந்து, மாணவர்கள் அமைதியாக வெளியே செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.