MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஜனவரி 31-க்குள் இதை செய்ய வேண்டும்!

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஜனவரி 31-க்குள் இதை செய்ய வேண்டும்!

விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 13 அன்று ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. ஓய்வூதியம் மற்றும் இதர பலன்கள் தொடர்பான குறைகளை ஜனவரி 31க்குள் மனுவாக அளிக்கலாம்.

2 Min read
Author : Web Team
| Updated : Jan 28 2025, 06:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம்

ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம்

நாடு முழுவதும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் மத்திய மாநில அரசுகளால் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எப்போது மனு அளிக்க வேண்டும்?

எப்போது மனு அளிக்க வேண்டும்?

இந்த குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை மனுவாக அளிக்கவும் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஓய்வூதியதாரர்கள் தங்கள் முறையீடுகளை அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்ப்பு கூட்டத்தில் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும்.

35
குறைதீர்ப்பு கூட்டம் எப்போது?

குறைதீர்ப்பு கூட்டம் எப்போது?

இந்த நிலையில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு கூட்டமானது விருதுநகர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க உள்ளார். சென்னை கூடுதல் ஓய்வூதிய இயக்குனர் முன்னிலை வகிக்க உள்ளார். 

எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது அரசு கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்களை பெறுவதில் சிக்கல் இருந்தால் இதுதொடர்பான கோரிக்கை மனுக்களை ஜனவரி 31-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு இரட்டை பிரதிகளில் அனுப்பலாம்.

45
என்னென்ன விவரங்கள்?

என்னென்ன விவரங்கள்?

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு என குறிப்பிட்டு இந்த மனுக்களை அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியில் இருந்து ஓய்வு பெற்ற கடைசி நாள், ஓய்வூதியம் கொடுவை எண், ஓய்வூதியம் பெற்று வரும் கருவூலம் ஆகிய விவரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

 

55
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே சென்னையில் உள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு பதில் ஏதேனும் பெற்றிருந்தால் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும். இதை தொடர்ந்து ஓய்வூதியதாரர்களின் குறைகள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து ஓய்வூதியதார்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK: எந்த நேரத்தில் தவெக வேட்பாளரை தொட்டாரோ இபிஎஸ்! அதிமுக பிரமுகர்களை சொல்லி சொல்லி தூக்கும் விஜய்.. இன்று 6 முன்னாள் அமைச்சர்!
Recommended image2
TN Weather Update: இன்று 4 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்; 13 மாவட்டங்களில் கனமழை.. உங்க ஊர் இருக்கா?
Recommended image3
Now Playing
தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved