- Home
- Tamil Nadu News
- பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய செய்தி! இன்று! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய செய்தி! இன்று! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Palani Murugan Temple
உலக பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் விசேஷ நாட்களாகும். இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகன் அருளை பெறுகின்றனர். வார இறுதி நாட்களில் சாமியை தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் முதல் 5 மணிநேரமாகிவிடும். மேலும் பழனி கோயிலில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் பஞ்சாமிர்தம் உலக புகழ் பெற்றது.
Rope Car Service
இந்நிலையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைபாடு உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
Maintenance Work
ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் 3 நிமிடத்தில் செல்வது மட்டுமல்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப் காரில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
Rope Car Service Stop
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
Devotees
ஆகையால் ரோப் கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி முருகனை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.