ஒரு கிலோ சின்ன வெங்காயம் 150 ரூபாயா.? கிடு கிடுவென உயர்வு- கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் , பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் வெங்காயத்தின் சரசரவென உயர்ந்துள்ளது.
பீட்ரூட் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும். பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சௌசௌ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெண்டைக்காய் விலை.?
முள்ளங்கி 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 13 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், சுரக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இஞ்சி விலை என்ன.?
முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 230க்கு, பூண்டு ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
Onion price
வெங்காயம் விலை என்ன.?
கோவக்காய் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு வாரமாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் இன்று சின்ன வெங்காயத்தின் விலை மேலும் 10 ரூபாய் உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் 130 முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வந்த நிலையில், இன்று 10 ரூபாய் விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது.