நெல்லையில் சினிமா பாணியில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து! அலறிய பயணிகள்! 36 பேரின் நிலை என்ன?
வேளாங்கண்ணியில் இருந்து நாகர்கோவில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து பாளையங்கோட்டையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Omni Bus
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த பேருந்து இன்று காலையில் பாளையங்கோட்டை ஐஆர்டி பாலிடெக்னிக் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Omni Bus Accident
இந்த விபத்தை அடுத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த 35 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! இவர்களுக்கு ரூ.1000 உயர்வு!
Nellai Accident
மேலும் இந்த பேருந்தில் பயணம் செய்த நெல்லை மாவட்டம் கூட்டப்புளியைச் சேர்ந்த பிரிஸ்கோ (64) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆஹா! நல்லா இருக்கே இந்த நாடகம்! முதல்வர் ஸ்டாலினை பங்கம் செய்த அன்புமணி!
Police investigation
இந்நிலையில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் பேருந்தின் ஓட்டுநர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் ஓட்டுநர் திடீரென தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.