MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 'உப்புமா கம்பெனி'; பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை கிண்டலடித்த சீமான்; கொந்தளிக்கும் திமுக!

'உப்புமா கம்பெனி'; பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை கிண்டலடித்த சீமான்; கொந்தளிக்கும் திமுக!

அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத்திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

2 Min read
Rayar r
Published : Dec 29 2024, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Seeman vs DMK

Seeman vs DMK

காலை உணவுத் திட்டத்தை விமர்சித்த சீமான் 

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' செயல்படுத்தப்ப‌ட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி அரசு தொடக்கப்பள்ளி மாணவ‍, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

24
Chief Minister's breakfast scheme

Chief Minister's breakfast scheme

7 நாளும் உப்புமா தான் 

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 'திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் கல்வி வளத்துக்காக என்ன செய்துள்ளது? ஒரே ஒரு திட்டங்களை சொல்லுங்கள் பார்ப்ப்போம்?' என்று நிரூபர்களை பார்த்து கேட்டார். அப்போது ஒரு செய்தியாளர் 'அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் இருக்கிறதே' என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த சீமான், ''திராவிட கட்சிகள் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தும் காலையில் சாப்பிட்டுக்கூட வர முடியாத அளவுக்கு எமது பிள்ளைகளை வறுமையில் வைத்திருப்பது ஏன்? இது என்ன தமிழ்நாடா? இல்லை சோமாலியாவா?, கென்யாவா? அல்லது நைஜீரியாவா? தமிழ்நாட்டில் தான் எல்லா வளமும் இருக்கிறதே. பிறகு என்ன??? 

அப்படியே பார்த்தாலும் காலை உண்வுத்திட்டத்தில் குழந்தைகளுக்கு பாலும், முட்டையுமா கொடுக்கிறார்கள்? 7 நாளில் 5 நாட்கள் உப்புமா தான் போடுகிறார்கள். நீங்கள் (அரசு) நடத்துவது உப்புமா கம்பெனிதானே'' என்று விமர்சனம் செய்தார்.

கோவை வந்த சேவாக்; கோயிலில் மனமுருகி சுவாமி தரிசனம்; திரண்டு வந்த ரசிகர்கள்!


 

34
Seeman Criticized TN Goverment

Seeman Criticized TN Goverment

திமுகவினர் கடும் எதிர்ப்பு 

சீமானின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ''ஏழை, எளிய குழந்தைகள் தினமும் சாப்பிட வழியில்லாமல் வெறும் வயிற்றில் பள்ளிக்கு வருகின்றனர். இதனால் அவர்களால் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இதை அறிந்துதான் அரசு தொடக்கப் பள்ளிகளில்  காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். 

இந்த திட்டத்தை ஏழை, எளிய குழந்தைகளின் தாய்மார்கள் வரவேற்றுள்ளனர். ஆகையால் சீமான் ஏழை, எளிய மக்களுக்கு எதிராக பேசி இருக்கிறார்'' என்று திமுகவினர் பலர் சீமானுக்கு எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

44
What is the breakfast scheme

What is the breakfast scheme

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்பது என்ன? 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு பிறகு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்களும், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்களும், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்களும், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்களும் என மொத்தம் 1,545 பள்ளிகளில் 1,14,095 மாணவர்கள் காலை உணவுத்திட்டத்தில் பயன்பெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மாணவர்களுக்கு தொடர் விடுமுறை; சாரை சாரையாக வந்த மக்கள்; களைகட்டிய சுற்றுலாத்தலங்கள்!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சீமான்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved