MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஜனவரி 10 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்

ஜனவரி 10 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்

2025ஆம் ஆண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கவுள்ளது. ஜனவரி 10ஆம் தேதியும் விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பொங்கலுக்கு தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Dec 31 2024, 08:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
School Holiday

School Holiday

மாணவர்களுக்கு கொண்டாட்டம்

மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறையோடு சேர்ந்து கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைத்தது. இதனால் தொடர் விடுமுறை கிடைத்ததால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். சொந்த ஊருக்கும், சுற்றுலாவிற்கும் புறப்பட்டனர். இந்த நிலையில் வருகிற 2025ஆம் ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கவுள்ளது. அதன் படி புத்தாண்டையொட்டி வருகிற புதன் கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
School Holiday

School Holiday

ஜனவரியில் தொடர் விடுமுறை

இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் முதல் 9 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை வாரத்தில் இரண்டாவது நாளில் வருவதால் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் விடுமுறை விடப்பட்டால் தொடர் விடுமுறை கிடைக்கும்,. இதனை தொடர்ந்து குடியரசு தினவிழா சனிக்கிழமையில் வரவுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல் ஜனவரி 10ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

35
srirangam

srirangam

திருச்சி ஸ்ரீரங்கம்- பரமபத வாசல்

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில். இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.

21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி  பல்வேறு மாவட்டங்களில் இருந்து  திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

45
sri rangam

sri rangam

திருச்சி உள்ளூர் விடுமுறை

இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஜனவரி 10ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறைக்குப் பதிலாக ஜனவரி 25 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.

55
school holiday

school holiday

தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு

ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக வருவதால் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கல்வி
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு அரசு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved