வேலை இல்லையா.! மாதம் 5000 ரூபாய் ஊக்கத்தொகை- இளைஞர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு மாதம் 5000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. மேலும் அரசு பணியில் காலியாக உள்ள 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை 2025ஆம் ஆண்டுக்குள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. அதன் படி அரசு பணியாளர் தேர்வு தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்கள் இணையும் வகையில் இலவசமாக பயிற்சியும் வழங்கி வருகிறது.
college student
அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மேலும் தனியார் நிறுவனங்களோடு தமிழக அரசு புதிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சலைகள் தொடங்குவதற்காக ஒப்பந்தமும் செய்யப்பட்டு புதிய, புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வருகிறது. அதன் படி லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. எனவே பல இடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குவிந்து கிடக்கிறது. மேலும் இளைஞர்கள் எந்த துறையில் இணைவது, எப்படி இணைவது, தங்களுக்கு விருப்பமான பணியில் சேர்வது என பல குழப்பத்தில் இருப்பார்கள். அப்படி தவிக்கும் இளைஞர்களுக்காக சூப்பர் அறிவிப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது. இதன் படி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப்
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களா நீங்கள்? தற்போது கல்லூரி முடித்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அந்த வகையில் வேலை தேடும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 1 கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் கிடைக்கும் 12 மாத PM இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி மாதம் 5000 ஊக்கத்தொகை வழங்கப்பட இருப்பதாகவும், இளைஞர்களின் ஆர்வத்தை பொறுத்து, எந்தத் துறையில் விரும்புகிறீர்களோ அந்த துறையில் 5 Internship வாய்ப்புகள் தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், ITI, டிப்ளமா, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு.
குடும்பத்தின் கடந்த ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
குறிப்புகள்
மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் www.naanmudhalvan.tn.gov.in இணையதளம் பாருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.