MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்களின் நலன் கருதி இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 22 2025, 02:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024-25ம் நடப்பாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி முடிவடைகிறது. 

25
செய்முறை தேர்வுகள்

செய்முறை தேர்வுகள்

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் முடிந்தது. 10ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

35
மின்தடை

மின்தடை

இதனிடையே தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். 

45
மின்தடை கிடையாது

மின்தடை கிடையாது

மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

55
மின்சார வாரியம்

மின்சார வாரியம்

இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்குவதால் இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்ய வேண்டாம் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்லகண்ணு ஐயா தான் உதாரணம் ! பிரேமலதா பேட்டி
Recommended image2
ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Recommended image3
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved