- Home
- Tamil Nadu News
- தப்பி தவறிகூட பகல் நேரத்தில் வெளியே போயிடாதீங்க! சுட்டெரிக்க போகுதாம் வெயில்! எச்சரிக்கும் வானிலை மையம்!
தப்பி தவறிகூட பகல் நேரத்தில் வெளியே போயிடாதீங்க! சுட்டெரிக்க போகுதாம் வெயில்! எச்சரிக்கும் வானிலை மையம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து வறண்ட வானிலை நிலவும்.

தப்பி தவறிகூட பகல் நேரத்தில் வெளியே போயிடாதீங்க! எச்சரிக்கும் வானிலை மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றாலும் பனியின் தாக்கல் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் குளிர் வாட்டி வதைத்து வந்தாலும் பகல் நேரங்களில் வெயில் சட்டெரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் இப்படி என்றால் கோடை காலங்களில் இன்னும் உக்கிரமாக இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் இயல்பை விட வெப்ப நிலை அதிகரித்து வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
வறண்ட வானிலை
14ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் 15 மற்றும் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பனிமூட்டம்
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.