MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு ஸ்கெட்ச் போட்ட அரசு.! இதை கடைப்பிடிக்கவில்லைனா அவ்வளவு தான்

பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு ஸ்கெட்ச் போட்ட அரசு.! இதை கடைப்பிடிக்கவில்லைனா அவ்வளவு தான்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயணம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இந்த நெறிமுறைகளைப் பின்பற்றி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க வேண்டும்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : May 03 2025, 08:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
பேருந்து ஓட்டுநர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

பேருந்து ஓட்டுநர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், நடைமுறைகளை உரியவகையில் பின்பற்றப்படவில்லையென புகார்கள் தொடர்ந்து வந்துள்ளது.

இதனையடுத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

27
மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணம்

மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணம்

1. மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக, பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணி பேருந்து நிறுத்தத்தில் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

2. ஓட்டுநர் பேருந்து நிற்பதற்கு அரிதியிடப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்பாகவோ /தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏறி/இறங்க சிரமம் ஏற்படுத்துக்கூடாது.

3. நடத்துனர் வேண்டும் என்றே. பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.

Related Articles

Related image1
மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம், திருமண உதவி தொகை உயர்வு.! ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Related image2
ஒரு வருடத்திற்கு அனைத்து அரசு பேருந்திலும் இலவசமாக பயணிக்கலாம்.! போக்குவரத்து துறை ஜாக்பாட் அறிவிப்பு
37
மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள்

4. மாற்றுத்திறனாளிகளுக்கு என பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து. அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.

5. மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தவுடன். கனிவுடன் பயணச்சீட்டுக்கள் வழங்கி அவர்கள் இறங்க வேண்டிய இடங்களில் பேருந்தினை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துனர்கள் உதவி செய்வதுடன், அவர்கள் இறங்கும் வரை காத்திருந்து அவர்கள் இறங்கி கடந்து சென்ற பின்னர் பேருந்தினை நகர்த்த வேண்டும்.

6. சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அம அமரச்செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும்

47
மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கீடு

மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கீடு

7. பேருந்து நிலையங்களில் பேருந்து புறப்படுவதற்கு முன், மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கையில், பேருந்து புறப்படும் வரையில் இதர பயணிகளை அமர வைக்காமல் வைத்திருந்து, ஒரு வேளை சாதாரண பயணிகள் அமர்ந்து இருப்பின், கடைசி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறினால், சாதாரண பயணிகளை மாற்றுத்திறனாளிகள் அமரும் பொருட்டு அவர்களுக்கான இருக்கையினை தர வேண்டும் என தெரிவித்து அமர வைக்க வேண்டும்.

57
பயணிகளை கனிவுடனும், அன்புடனும் நடத்திடனும்

பயணிகளை கனிவுடனும், அன்புடனும் நடத்திடனும்

8. மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவர்கள் மனம் புண்படும் வகையிலோ, எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.

9. பேருந்தில் ஏறும் மாற்றுத் திறனாளி பயணிகளை கனிவுடனும், அன்புடனும் நடத்திட வேண்டும்.

10. மாற்றுத்திறனாளி பயணிகள் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்ஞை (Signal) செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். 

67
கட்டணமில்லா பயணச் சீட்டு

கட்டணமில்லா பயணச் சீட்டு

11. இந்திய அரசு அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள (Unique Disability ID Card) and National Disability Identity Certificate Cards (NDIC) அசல் அட்டை கொண்டு, 40 சதவீதம் மாற்றுத் திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் (Escort) ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White board) மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய கட்டணமில்லா பயணச் சீட்டினை பேருந்து நடத்துனர் வழங்க வேண்டும்.

77
75% பயணக் கட்டண சலுகை

75% பயணக் கட்டண சலுகை

12. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் புறநகர் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி, 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

13. இயற்கை சீற்றம் உள்ள நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கட்டண நிறுத்தம் இல்லாத இடங்களிலும், கோரிக்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள். மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர் கேட்கும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்தினை நிறுத்தி ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பேருந்து
அரசு பேருந்து
தமிழ்நாடு அரசு
டிக்கெட் முன்பதிவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம், திருமண உதவி தொகை உயர்வு.! ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Recommended image2
ஒரு வருடத்திற்கு அனைத்து அரசு பேருந்திலும் இலவசமாக பயணிக்கலாம்.! போக்குவரத்து துறை ஜாக்பாட் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved