MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம், திருமண உதவி தொகை உயர்வு.! ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம், திருமண உதவி தொகை உயர்வு.! ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள், இயற்கை உபாதைகளைக் கழிக்கும் வசதியுடன் கூடிய சக்கர நாற்காலிகள் மற்றும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் போன்ற உதவிகள் வழங்கப்படும்.

2 Min read
Ajmal Khan
Published : Apr 17 2025, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Tamil Nadu government announcement for the welfare of the differently-abled தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. 

1. தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட பாதிப்பால், கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட (Tetraplegic / Quadriplegic)  மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி (Battery Operated Wheel Chair) வழங்கும் திட்டத்தினை பிற வகையினால் கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் நீயோ போல்ட் போன்ற உபகரணங்களை பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.87 கோடி மதிப்பில் விரிவுபடுத்தி வழங்கப்படும்.

25
Disabled welfare schemes

Disabled welfare schemes

2. தசைச்சிதைவு நோய், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பல்வகைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, இயற்கை உபாதைகளை கழிக்கும் வகையிலான சக்கர நாற்காலி (Commode Wheel Chair) வழங்கும் திட்டம் 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

தசைச்சிதைவு நோய், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பல்வகைக் குறைபாடுடன் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்,  சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே, இயற்கை உபாதைகளைக் கழிக்கும் வசதியுடன் கூடிய ரூ.12,000/- மதிப்புள்ள மடக்கு சக்கர நாற்காலிகள்,  முதற்கட்டமாக ரூ.120.00 இலட்சம் மதிப்பில் 1000 பயனாளிகளுக்கு வழங்கப்படும். 

35
Marriage assistance

Marriage assistance

3. மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மகள்/மகன் திருமணத்திற்கான உதவித்தொகையை ரூ.2,000/-லிருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 

4. மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் இயற்கை மரணம்   மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவிதொகையை ரூ,17,000/-லிருந்து ரூ.30,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

45
welfare of the differently-abled

welfare of the differently-abled

 5. பத்து      வருடங்களுக்கு      முன்னர்     மோட்டார்   பொருத்திய தையல் இயந்திரங்கள்  (Motorised Sewing Machines)    பெற்ற      பயனாளிகளுக்கு   மீண்டும் புதிய  மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.  பத்து வருடங்களுக்கு முன்பு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் பெற்ற பயனாளிகளின் உபகரணங்கள் பழுதடைந்து, அவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், பழுதடைந்த உபகரணத்திற்கு மாற்றாக ஒவ்வொரு ஆண்டும் கொள்முதல் செய்யப்படும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களில் 25 சதவீதம், 2025–2026 ஆம் நிதியாண்டு முதல் புதிதாக வழங்கப்படும். 

55
Tamil Nadu government announcement

Tamil Nadu government announcement

6.  மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் மேற்கொள்வதற்காக செயல்படுத்தப்படும்  மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள்   (Motorised Sewing Machines)  வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்பிற்குட்பட்ட மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், புறஉலக சிந்தனையற்ற / மதிஇறுக்கம் ஆகிய 2000 மாற்றுத்திறனாளிகள் அல்லது  பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1.30 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு அரசு
அரசு திட்டம்
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved