- Home
- Tamil Nadu News
- எந்த வேலை இருந்தாலும் சட்டுபுட்டுனு முடிச்சுடுங்க! தமிழகத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
எந்த வேலை இருந்தாலும் சட்டுபுட்டுனு முடிச்சுடுங்க! தமிழகத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, நாளை கோவை, தர்மபுரி, மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்த முழு விவரங்கள்.

மாதாந்திர பராமரிப்பு பணி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அவ்வப்போது மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணி நேரம் என்பதை பார்ப்போம்.
கோவை
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை, செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம், வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
தர்மபுரி
மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், கேல்மொரப்பூர், கணபதிபட்டி, சொக்கம்பட்டி, கீரைப்பட்டி, வேப்பம்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, பெரியபட்டி, குத்தாடிப்பட்டி, கோட்டைப்பட்டி, மாவேரிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சேலம்
செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

