மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் தோல்வி! சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என தீர்ப்பு.

கொளத்தூரில் ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு.. மீண்டும் ஒரு பின்னடைவு!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.
வி.எஸ்.பாபு 82,997 வாக்குகளையும், மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகளையும் பெற்ற நிலையில், 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
100% விவிபேட் எண்ணிக்கை.. 286 இயந்திரங்களையும் சோதிக்க கோரிக்கை!
கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 286 வாக்குப்பதிவு இயந்திரங்களையும் முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்றும், விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில், சில இயந்திரங்கள் செயலிழந்ததாகவும், சில நடைமுறை குறைபாடுகள் இருந்ததாகவும் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் முடிவை எதிர்ப்பதற்கு உரிய சட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், தற்போதைய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிடப்பட்டது.
ஸ்டாலின் மனு தள்ளுபடி! வி.எஸ்.பாபுவின் வெற்றிக்கு தொடரும் சட்ட அங்கீகாரம்!
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்தது.
இதன் மூலம் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவை எதிர்ப்பதற்கான உரிய சட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

