- Home
- Tamil Nadu News
- அகவிலை படி 58% உயர்வு..! ஆசிரியர்கள் நீண்ட நாளா காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு....- முதல்வர் அதிரடி உத்தரவு
அகவிலை படி 58% உயர்வு..! ஆசிரியர்கள் நீண்ட நாளா காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு....- முதல்வர் அதிரடி உத்தரவு
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி பல நாட்களாக போராடி வருகின்றனர். குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்டவை ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது.
அகவிலைப்படி 58% உயர்வு
இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவு
கடந்த ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு இது அமலுக்கு வரும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை அமல் படுத்துவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.