அண்ணாமலையை அசிங்கப்படுத்திய டிஆர்பி ராஜா மகன்..! ஆயிரக்கணக்கானோர் முன்பு நோஸ்கட்
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கையில் இருந்து பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் செய்த செயல் பலரையும் முகம் சுழிக்கச் செய்துள்ளது.

பதக்கம் வாங்க மறுத்த ராஜா மகன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில் நடைபெற்ற 51-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜாபாலு, முன்னாள் தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை கையால் பதக்கம் அணிய மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தந்தை 8 அடி பாய்ந்தால், மகன் 16 அடி பாய்கிறார்?
இந்தப் போட்டியில் சூரிய ராஜாபாலு வெற்றி பெற்று, பதக்கம் பெற மேடைக்கு அழைக்கப்பட்டார். அண்ணாமலை அவருக்கு பதக்கத்தை கழுத்தில் அணிவிக்க முயன்றபோது, சூரிய ராஜாபாலு மறுத்து, பதக்கத்தை கையில் மட்டும் வாங்கினார். இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. திமுக ஆதரவாளர்கள் இதைப் பகிர்ந்து, "தந்தை 8 அடி பாய்ந்தால், மகன் 16 அடி பாய்கிறார்" என்று குறிப்பிட்டனர்.
ராஜா விதைத்த விதை
இந்த நிகழ்வு அரசியல் காரணங்களால் நடந்ததாக சிலர் விமர்சித்தனர், ஏனெனில் டி.ஆர்.பி. ராஜா திமுகவின் முக்கிய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனுமாவார். இதனால், அண்ணாமலை மற்றும் டி.ஆர்.பி. ராஜா இடையே ஏற்கெனவே அரசியல் மோதல்கள் இருந்த சூழலில், இந்தச் சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்னதாக கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது அண்ணாமலையை ஆடு என்று குறிப்பிட்டு பேசியிருந்த டிஆர்பி ராஜா பல இடங்களில் தேர்தலுக்கு பின்னர் ஆடு அறுக்கப்பட்டு அனைவருக்கும் பிரியாணி விருந்தளிக்கப்படும் என்று பேசி மோதலுக்கு வித்திட்டார். பதிலுக்கு அண்ணாமலையும் பல விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.