- Home
- Tamil Nadu News
- சென்னை, மதுரையில் மின்சார பேருந்து.! எப்போது இயக்கப்படுகிறது.? வெளியான அசத்தல் அறிவிப்பு
சென்னை, மதுரையில் மின்சார பேருந்து.! எப்போது இயக்கப்படுகிறது.? வெளியான அசத்தல் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் சேவையில் சேர உள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் மதுரையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படவுளத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Electric buses In Tamilnadu : நவீன கால கட்டத்திற்கு ஏற்ப தொழில் நுட்பங்களும் மாறி வருகிறது. அந்த வகையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சார பேருந்துகளை இயக்க திட்டங்கள் வகுக்கப்பட்டது. ஜெர்மனி வங்கியின் நிதி உதவி கீழ் மாநகரப் போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக டெண்டர் விடப்பட்டது.
இதனையடுத்து இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மின்சார பேருந்துகள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. சென்னை எண்ணூரில் அமைந்துள்ள ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தில் அமைச்சர் சிவ சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மின்சார பேருந்துகள்
முதல் கட்டமாக ஏசி இல்லாத பேருந்து என 625 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த நிலையில் மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 32 புதிய மகளிர் விடியல் பயணம் பேருந்துகள் மற்றும் 60 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வழங்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருந்த பழைய பேருந்துகளை மாற்றி புதிதாக 3000 பேருந்துகள் விட இந்த ஒரு நல்ல சூழல் ஏற்பட்டிருக்கிறது.
tamilnadu electric buses
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் ஏற்கனவே 634 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. தீபாவளி பொங்கல் ஆகட்டும் எல்லா நேரங்களிலும் நம்முடைய துறையிலே பணியாற்றியுள்ள ஒத்துழைப்போடு எந்த பிரச்சனையும் இல்லாமல் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று தங்கள் விழாவை தங்கள் குடும்பத்தாரோடு கொண்டாட கூடிய ஒரு நிலை வந்து கொண்டிருக்கிறது.
தீபாவளி பொங்கல் தினங்களில் மட்டும் அல்ல ஒவ்வொரு மாதத்திலும் எதாவது ஒரு வகையில் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகின்ற நேரத்தில் எல்லாம் மக்களுடைய பயணம் இன்றைக்கு சிறப்பாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
சென்னை- மதுரையில் மின்சார பேருந்து
இந்த நிலையில் ஜூன் மாதம் மின்சார பேருந்து திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் மதுரையில் செயல்பாட்டிற்கு மின்சார பேருந்துகள் வரும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.