MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மத்திய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பதுங்குக்குழி பழனிசாமி எங்கே? செந்தில் பாலாஜி!

மத்திய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பதுங்குக்குழி பழனிசாமி எங்கே? செந்தில் பாலாஜி!

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு ரூ.2,000 கோடி கல்வி நிதி விடுவிக்கப்படவில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்காதது குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 16 2025, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மத்திய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பதுங்குக்குழி பழனிசாமி எங்கே? செந்தில் பாலாஜி!

மத்திய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பதுங்குக்குழி பழனிசாமி எங்கே? செந்தில் பாலாஜி!

சமக்ரா ஷிக்ஷா அபியான் என்ற மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. பலமுறை தமிழக அரசு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்து மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை விடுவிக்க முடியாது. பிற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழ்நாடு மட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன்?
தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் மாநிலத்திற்கான கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என்றால் ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

25
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

இதற்கு முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் உள்ளிட்ட கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

35
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார். 'தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்' என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

45
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள். வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?

55
இரு மொழிக் கொள்கை

இரு மொழிக் கொள்கை

சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா? இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு? இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும். எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
திமுக
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு
பிஜேபி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி
Recommended image2
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!
Recommended image3
சங்கீதா முடிவின் பின்னணியில் அரசியல் சதி?.. விஜய்யை முடக்கும் 'மெகா' கட்சி?.. தவெகவினர் புலம்பல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved