MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK Vs EPS: காங்கிரஸ் தயவில் தவெக ஆட்சி! எங்கிருந்து தைரியம் வந்தது! விஜய்யை விடாமல் வம்பிழுக்கும் இபிஎஸ்!

TVK Vs EPS: காங்கிரஸ் தயவில் தவெக ஆட்சி! எங்கிருந்து தைரியம் வந்தது! விஜய்யை விடாமல் வம்பிழுக்கும் இபிஎஸ்!

கர்நாடக அரசின் இந்த தன்னிச்சையான முடிவை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும், மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 22 2026, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : DK Shivakumar FB

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை. இதுகுறித்து மத்திய நீர் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின் உடனடியாக பூமி பூஜை நடக்கும் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார். இவரது அந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு என்ன? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Image Credit : Asianet News

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது. தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா?

Related Articles

Related image1
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெண் ஊழியர் செய்த கேவலமான வேலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
Related image2
Heatwave Alert: மண்டையை பொளக்கும் 107° வெயில்.. அடுத்த 2 வாரத்திற்கு உஷார்.. சென்னை மக்களுக்கு டேஞ்சர் அலர்ட்!
34
Image Credit : Asianet News

மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது? தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா? காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. காவிரி நதிநீர் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதாரம் ஆகும். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியாறு விளங்கி வருகிறது. மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். காவிரி தொடர்பாக தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருநாளும் அனுமதிக்காது.

44
Image Credit : Asianet News

கர்நாடக துணை முதல்வரின் இப்பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
டிவி.கே. விஜய்
அரசியல்
கர்நாடகா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai-Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு இனி 3 மணி நேரம் தான்! மதுரவாயல் டூ ORR பறக்கும் சாலை! செம அப்டேட்!
Recommended image2
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெண் ஊழியர் செய்த கேவலமான வேலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
Recommended image3
Mathipumigu Magalir Thittam: பெண்கள் வங்கிக் கணக்கில் வரப்போகும் ரூ.2,500.. மகளிர் உரிமைத் தொகை! சூப்பர் அப்டேட்!
Related Stories
Recommended image1
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெண் ஊழியர் செய்த கேவலமான வேலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
Recommended image2
Heatwave Alert: மண்டையை பொளக்கும் 107° வெயில்.. அடுத்த 2 வாரத்திற்கு உஷார்.. சென்னை மக்களுக்கு டேஞ்சர் அலர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved