- Home
- Tamil Nadu News
- சாராய விற்பனையை போலீசாரிடம் போட்டுக் கொடுத்த இளைஞர்களை போட்டுத் தள்ளிய பயங்கரம்! பதற்றம்! போலீஸ் குவிப்பு!
சாராய விற்பனையை போலீசாரிடம் போட்டுக் கொடுத்த இளைஞர்களை போட்டுத் தள்ளிய பயங்கரம்! பதற்றம்! போலீஸ் குவிப்பு!
மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் மூவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

சாராய விற்பனையை போலீசாரிடம் போட்டுக் கொடுத்த இளைஞர்களை போட்டுத் தள்ளிய பயங்கரம்! பதற்றம்! போலீஸ் குவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தை அடுத்துள்ள முட்டம் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய 3 பேர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாராய வியாபாரியான ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
சாராய விற்பனை
இதனையடுத்து ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்தும் மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களான ஹரிசக்தி, ஹரிஷ் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அப்பகுதி மக்கள் சமாதானம் செய்து வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் ஹரிசக்தி, ஹரிஷ் ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் ஒரே நேரத்தில் 3 இளைஞர்கள் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! பீதியில் பொதுமக்கள்!
இரண்டு இளைஞர்கள் கொலை
ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து சாராய வியாபாரிகள் 3 பேர் அங்கிருந்து தப்பித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய வியாபாரிகள் 3 பேரை தீவிரமாகத் தேடி வந்தனர்.
சாலை மறியல் போராட்டம்
இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி இளைஞர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாலை மறியலில் ஈடுபடுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டது.
சாராய வியாபாரிகள் 3 பேர் கைது
இதனையடுத்து இரட்டை கொலை சம்பவத்தில் சாராய வியாபாரி ராஜ்குமார், தங்கதுரை கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மூவேந்தனும் தற்போது கைது செய்யப்பட்டார். சாராய விற்பனை செய்ததை தட்டிக்கேட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாராயம் விற்றதை போலீசிடம் போட்டுக்கொடுத்ததால் சிறையில் இருந்து நேற்று மாலை வெளியே வந்தவர் நண்பர்களுடன் சேர்ந்து வெறிச்செயல் ஈடுபட்டுள்ளனர்.