MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நான் முதன் முதலில் திருடியது என்ன தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த மாரி செல்வராஜ்!

நான் முதன் முதலில் திருடியது என்ன தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த மாரி செல்வராஜ்!

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் காலை உணவுத் திட்டத்தை பாராட்டித் தள்ளிய மாரி செல்வராஜ், தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டம் குறித்து உருக்கமாக பேசினார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 25 2025, 08:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கல்வியில் சிறந்த தமிழ்நாடு
Image Credit : Asianet News

கல்வியில் சிறந்த தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இயக்குநர் மாரி செல்வராஜ்
Image Credit : Google

இயக்குநர் மாரி செல்வராஜ்

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் சிவகுமார், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், மிஸ்கின், பிரேம் குமார், ஞானவேல், கிரிக்கெட் வீரர் நடராஜன், தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்விக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயன் பெறும் பயனாளிகள் மேடையேறி பேசினார்கள்.

வாழைப்பழம் திருடினேன்

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், காலை உணவுத் திட்டத்தின் பெருமை குறித்து பேசினார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு இந்த தலைப்பை கேட்கும்போதே அவ்வளவு பெருமையாக உள்ளது. நான் முதன் முதலில் பசியால் தான் திருட்டுப் பழக்கத்தை கற்றுக் கொண்டேன். நான் முதலில் வாழைப்பழத்தை தான் முதலில் திருடினேன்.

34
பசி தான் இதற்கு காரணம்
Image Credit : Google

பசி தான் இதற்கு காரணம்

என்னுடைய வீட்டுக்கும், பள்ளிக்கும் குறைந்தது 4 கிமீ இருக்கும். 4 கிமீ நடந்து போவேன்; பின்பு நடந்து வருவேன். நான் எழும்போதே எனது அம்மா, அப்பா வேலைக்கு சென்று விடுவார்கள். பசியோடு தான் பள்ளிக்கூடம் செல்வோம். பசியோடு தான் திரும்பி வருவோம். வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்து வாழைப்பழங்களை பறித்து சாப்பிடுவது தான் எங்களின் தினசரி உணவாக இருக்கும். நாஙள் பசங்க எல்லோரும் வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து அவரவருக்கு தேவையான வாழைபழங்களை சாப்பிடுவோம்.

44
பசியால் படிப்பை நிறுத்தியவர்கள் நிறைய பேர்
Image Credit : Google

பசியால் படிப்பை நிறுத்தியவர்கள் நிறைய பேர்

எங்களுக்கு பசி என்பது பெரிய போராட்டமாக இருக்கும். பசியால் படிப்பை நிறுத்தியவர்கள் நிறைய பேர். நான் கூட படித்தவர்கள் நிறைய பேர் பசியால் படிப்பை நிறுத்தியுள்ளனர். பள்ளிக்கூடம் நிறைய தூரம் இருப்பதால் பசியுடன் அவ்வளவு தூரம் போய் விட்டு வர முடியாது. 

காலை உணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்த அன்று நான் அடைந்த அளவுக்கு மகிழ்ச்சியே இல்லை. இந்த ஒரு திட்டத்துக்காக நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நான் மட்டுமல்ல என்னுடன் படித்து படிப்பை பாதியில் நிப்பாட்டிய அனைவருக்கும் காலை உணவுத் திட்டம் மகிழ்ச்சி அளித்திருக்கும்'' என்றார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு கல்வி
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jason Sanjay Opens Up: அப்பா காத்திருக்கிறார்! தந்தையைப் பற்றி முதன்முதலாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்.!
Recommended image2
Now Playing
சமூக நீதி நாள்: தந்தை பெரியார் உருவப்படத்திற்கு தவெக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை!
Recommended image3
Now Playing
லண்டன் பயணத்தை நிறைவு செய்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் !
Related Stories
Recommended image1
மாரி செல்வராஜ் படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? ரிலீஸுக்கு முன்பே கல்லாகட்டும் பைசன் காளமாடன்!
Recommended image2
கல்வியில் சிறந்த தமிழ்நாடு! ஸ்டாலின் 'அப்பா' எங்களுக்கு சோறு போடுறாங்க! பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved