MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஜூலை 7 முதல்! வீடு தேடி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!

ஜூலை 7 முதல்! வீடு தேடி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர், மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தைத் தொடங்குகிறார். ஜூலை 15 முதல் நவம்பர் வரை 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 06 2025, 06:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
Image Credit : our own

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார். முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, வரும் ஜூலை 15ம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அனைத்து மாவட்டங்களிலும்
Image Credit : Google

அனைத்து மாவட்டங்களிலும்

இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும்.

35
மருத்துவ முகாம்கள்
Image Credit : Google

மருத்துவ முகாம்கள்

இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள். இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள்/ சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.

45
மகளிர் உரிமைத் தொகை
Image Credit : magalir urimai thogai

மகளிர் உரிமைத் தொகை

மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

55
வீடு வீடாக சென்று விண்ணப்பம்
Image Credit : magalir urimai thogai

வீடு வீடாக சென்று விண்ணப்பம்

இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
 
3rd TEST • SA vs AUS
Lunch
SASA
329
AUSAUS
(27.0 ov)90/2
Day 2 - Session 1
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Thalai Deepavali : தலை தீபாவளி 2026.. புதுமணத் தம்பதிகளுக்கு சீர் கொடுப்பது முதல் விருந்து வரை.. மறைந்திருக்கும் பாரம்பரிய ரகசியங்கள்!
Recommended image2
Driverless Train: டிரைவரே இல்லாமல் சீறிப்பாயும் மெட்ரோ ரயில்கள்! சென்னையில் வரப்போகும் மெகா மாற்றம்!
Recommended image3
Now Playing
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு : சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுரை !
Related Stories
Recommended image1
இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டப்போகுதாம்! சென்னையின் நிலவரம் என்ன?
Recommended image2
ரிதன்யா கணவருக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணைகள்! 300 பவுன் நகைகள், வால்வோ கார்! வைரலாகும் போட்டோஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved