ஆகஸ்ட் 9ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு..!
திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
thiruthani murugan
முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்வது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். ஆடி கிருத்திகையை முன்னிட்டு வரும் 9ம் தேதி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருள்ளூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் வரும் 26 ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.