லெஸ்பியன் உறவு! காதலி சுமித்ராவுக்கு பாரதி அனுப்பிய அதிர்ச்சி போட்டோஸ் வைரல்
கிருஷ்ணகிரி அருகே 5 மாத ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், குழந்தையின் தாய் தனது தோழியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது செல்போன் மூலம் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து தாய் பாரதி அவரது தோழி சுமித்ரா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர், பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், சுரேஷ் மனைவி பாரதிக்கும், எதிர் வீட்டை சேர்ந்த திருமணமாகாத சுமித்ரா (22) என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் (லெஸ்பியன்) ஓரினச்சேர்க்கையாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் பாரதிக்கு சுமித்ரா மீது கொண்ட எல்லை மீறிய காதலால் தனது மார்பில் SUMI என டாட்டூ குத்திக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி பாரதி மற்றும் சுமித்ராவையும் எச்சரித்துள்ளார். இதனால் சிறிது காலம் பேசாமல் இருந்துள்ளனர். பின்னர் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி பாரதி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்த போது மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து தாய் பாரதி கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், குழந்தையின் தந்தை சுரேஷ் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கவில்லை. மகனின் உடலில் கத்திப்படுவதை தான் விரும்பவில்லை எனக்கூறி, பிடிவாதத்துடன் குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து நல்லடக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில் யாதர்த்தமாக மனைவி பாரதியின் செல்போனை எடுத்து கணவர் சுரேஷ் பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 20 வயது இளம்பெண் ஒருவருடன் தனிமையில் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இறந்த குழந்தையின் புகைப்படங்களும் வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பாரதியின் செல்போனில் சுமித்ரா உடனான உரையாடல்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து குழந்தையின் தந்தை சுரேஷ் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து குழந்தையின் தாய் பாரதி மற்றும் சுமித்ரா இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பாரதி மற்றும் சுமித்ரா இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.