- Home
- Tamil Nadu News
- மகளிர் உரிமைத் தொகை: தமிழக மக்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு
மகளிர் உரிமைத் தொகை: தமிழக மக்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மே 29 முதல் புதிய விண்ணப்பங்கள் தொடங்கும். பெறுநர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Kalaignar Magalir Urimai Thogai Scheme
தமிழகத்தில் திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு அவர்களின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அமைந்தது. திமுக தனது பிரசாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. அதன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை அமல் படுத்துவதில் திமுக அரசு ஆர்வம் செலுத்தியது.
Kalaignar Magalir Urimai Thogai Scheme
இதன் தொடர்ச்சியாக கடந்த 2023 செப்டம்பர் மாதம் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி இல்லத்தரசிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை காலங்களில் மகளிர் உரிமைத் தொகையானது பண்டிகைக்கு முன்பாகவே வரவு வைக்கப்படுவதால் இல்லத்தரசிகள் சற்று மனநிறைவுடன் உள்ளனர்.
Kalaignar Magalir Urimai Thogai Scheme
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 ரேஷன் அட்டைகளில் இந்த திட்டத்தின் அடிப்படையில் 1 கோடியே 14 லட்சம் இல்லத்தரசிகள் மட்டும் பயன் பெற்று வருகின்றனர். இதனால் திட்டத்தில் பயன்பெறாத பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான விமர்சனம் அதிகரித்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதல் பயனாளர்களை சேர்க்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
Kalaignar Magalir Urimai Thogai Scheme
அதன்படி இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபர்கள் வருகின்ற 29ம் தேதி முதல் தங்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 2 மாதங்களில் நடவடிக்கை எடுத்து ஆகஸ்ட் மாதம் முதலே மீதம் உள்ள பயனர்களுக்கும் ரூ.1000 செலுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.