MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • “வரலாற்று பிழையை செய்தவர் ஜெயலலிதா” கடம்பூர் ராஜூவின் பேச்சால் அதிமுக.வில் சலசலப்பு

“வரலாற்று பிழையை செய்தவர் ஜெயலலிதா” கடம்பூர் ராஜூவின் பேச்சால் அதிமுக.வில் சலசலப்பு

1998ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை கவிழ்த்ததன் மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழையைச் செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Jul 30 2025, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பாஜக அரசை கவிழ்த்தது ஏன்?
Image Credit : Google

பாஜக அரசை கவிழ்த்தது ஏன்?

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுடன் கூட்டணி அமைத்திருந்தது. தொடர்ந்து 13 மாதங்கள் இந்த கூட்டணி தொடர்ந்த நிலையில், ஜெயலலிதா முன்வைத்த கோரிக்கைகளை பாஜக அரசு நிறைவேற்றாத நிலையில் அக்கட்சிக்கு தாம் வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதனால் வாஜ்பாய் தலைமையிலான அரசு வீழ்ந்தது. 

அப்போது தன் மீதான வழக்குகளை முடித்து வைக்க வேண்டும், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக அரசை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா கோரிக்கை விடுத்ததாகவும், இது நிறைவேறாததால் ஆதரவு திரும்பப் பெறப்பட்டதாகவும் வரலாறு உண்டு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஜெயலலிதா வரலாற்று பிழையை செய்துவிட்டார்
Image Credit : Google

ஜெயலலிதா வரலாற்று பிழையை செய்துவிட்டார்

இந்நிலையில், கோவில்பட்டியில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “1998ல் வாஜ்பாய் அரசை கவிழ்த்தன் மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழையை செய்துவிட்டார். 13 மாதங்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், அப்போது குறுக்கே வந்த சுப்பிரமணியின் பேச்சை கேட்டு ஜெயலலிதா ஆட்சியை கவிழ்த்தார். அதன் பின்னர் திமுக 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்று தங்கள் கட்சியை வளர்த்துக் கொண்டனர்.

33
திமுக வளர காரணமே பாஜக தான்!
Image Credit : our own

திமுக வளர காரணமே பாஜக தான்!

தமிழகத்தில் திமுக வளர காரணமாக இருந்ததே பாஜக தான். ஆனால் அவர்கள் தற்போது பாஜக என்னவோ தீண்டத்தகாத கட்சியைப் போன்று பேசுகிறார்கள். ஜெயலலிதா மட்டும் அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் தற்போது திமுக என்ற கட்சியே இருந்திருக்காது” என்று ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து பேசியுள்ளது கட்சியில் தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
Recommended image2
Now Playing
தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
Recommended image3
Now Playing
வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
Related Stories
Recommended image1
தங்கம் விலை நிலவரம் மாதிரி கொலை நிலவரப்பட்டியல் வருகிறது - அஜித்குமார் வீட்டில் எடப்பாடி பழனிசாமி
Recommended image2
அலட்சியப்படுத்தும் பாஜக: தவெக.வுடன் கைகோர்க்கும் OPS? இன்று முக்கிய முடிவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved