- Home
- Tamil Nadu News
- மாதம் 3 லட்சம் சம்பளம்.! செவிலியர்களுக்கு சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு சொன்ன முக்கிய அறிவிப்பு
மாதம் 3 லட்சம் சம்பளம்.! செவிலியர்களுக்கு சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு சொன்ன முக்கிய அறிவிப்பு
செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்பு அளிக்கிறது. 9 மாத ஜெர்மன் மொழிப் பயிற்சிக்குப் பின், மாதம் 2.5 முதல் 3 லட்சம் வரை சம்பளத்தில் வேலை வழங்கப்படும்.

வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தமிழக அரசு
ஒவ்வொரு ஆண்டும் கல்வியை முடித்து பல லட்சம் பேர் வேலை தேடி பல இடங்களுக்கு செல்கிறார்கள். எனவே வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தமிழக அரசு, அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இதனால் பல ஆயிரம் பேரின் அரசு வேலை கனவு நினைவாகிவருகிறது.
அடுத்ததாக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் பல இடங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதனால் வேலைக்காக சென்னை போன்ற பெரிய இடங்களுக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அதற்கு ஏற்ப தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
அடுத்ததாக சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பயிற்சிகளும் அளித்து வருகிறது. பேக்கரி தொழில், வீட்டு உபயோக பொருட்கள், யூடியூப்பில் வருமானம் ஈட்டுவது போன்ற பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு கடன் உதவிக்கான வழிகாட்டவும் செய்யப்படுகிறது.
மேலும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல விருப்பப்படுபவர்களுக்காக வழிகாட்டவும் செய்கிறது. துபாய், சவுதி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் அறிவிக்கப்பட்டு எந்த வித இடைத்தரகர்கள் இல்லாமல் வேலைக்கான வழிகாட்டி வருகிறது.
மாதம் 3 லட்சம் சம்பளத்தில் வேலை
இந்த நிலையில் செவிலியர் பணிக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் பணியாளர்கள் தேவை என்பதால் பல லட்சங்களில் ஊதியம் கொடுக்கப்படுகிறது. ஜெர்மனியில் மாதம் 3 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே தமிழகத்தை சேர்ந்த செவிலியர்களுக்கு வாய்ப்பு வழங்கிடும் வகையில் ஜெர்மனி மொழி பயிற்சி அளித்து வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில், செவிலியர்களுக்கு ஜெர்மன் கற்க அரிய வாய்ப்பதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது.
செவிலியர்களுக்கு ஜெர்மனி மொழி பயிற்சி
தகுதிகள் :
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
. பி.எஸ்.சி நர்சிங், பொது நர்சிங் மற்றும் (GNM Diploma) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது : 21-35
குடும்ப ஆண்டு வருமானம் < ரூ.3.00 லட்சம்
இப்பயிற்சிக்காக கால அளவு ஒன்பது மாதம்
மேலும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும்.
மாதம் 3 லட்சம் சம்பளம்
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக . 2,50,000/- முதல் . 3,00,000/-வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாமல் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டிய www.tahdco.com என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.