MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாதம் 40ஆயிரம் சம்பளம்.! வெளிநாட்டில் கொட்டிக்கிடக்கும் வேலை- உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு

மாதம் 40ஆயிரம் சம்பளம்.! வெளிநாட்டில் கொட்டிக்கிடக்கும் வேலை- உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஓமனில் Production, Quality Inspector மற்றும் Electrical Maintenance பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. Diploma/ITI தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். உணவு, விசா, இருப்பிடம், விமான பயணச்சீட்டு இலவசம்.

2 Min read
Ajmal Khan
Published : Aug 05 2025, 07:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
Image Credit : our own

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படுகிறது. அடுத்ததாக பல வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்தில் அதிகளவு குவிந்து வருகிறது. 

இதன் காரணமாக பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அடுத்ததாக வெளிநாட்டிற்கு சென்று கை நிறைய சம்பளம் வாங்குபவர்களுக்காக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பிற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்து வருகிறது.

24
ஐடிஐ- டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை
Image Credit : stockPhoto

ஐடிஐ- டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

அந்த வகையில் ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure Melting/Molding/Process Control) Quality Inspector (Exposure in Final Inspection) மற்றும் Electrical Maintenance Quality/தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

 நாட்டில் பணிபுரிய Diploma in Mechanical Engineer /ITI தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 26 வயதிற்கு உட்பட்ட Production (Exposure in Melting/Moulding/Process Control) Quality Inspector (Exposure in Quality/ Final Inspection) மற்றும் Electrical Maintenance பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

Related Articles

Related image1
₹56,100 சம்பளத்தில் இளைஞர்களுக்கு ஜாக்பாட்: இந்திய கடற்படையில் SSC எக்ஸிகியூட்டிவ் (IT) வேலை - மிஸ் பண்ணாதீங்க!
Related image2
மத்திய அரசில் வேலை பார்க்க ஆசையா? கல்வி தகுதி 10-ம் வகுப்பு போதும்! 107 காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹78,800 வரை!
34
மாதம் 40ஆயிரம் சம்பளம்
Image Credit : our own

மாதம் 40ஆயிரம் சம்பளம்

இப்பணிக்கு மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் ரூ.40,000/ வரை ஊதியமாக வழங்கப்படும். உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப் பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

44
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
Image Credit : our own

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம் (Resume, Passport Original & Copy) Aadhaar Copy & Photo ஆகியவற்றை 15.08.2025க்குள் அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் உருகிறது புயல்? அடுத்த 3 மணிநேரம் உஷார்! 11 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம்!
Recommended image2
பிரதமரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார்! முதல்வர் ஸ்டாலின் திடீர் அறிவிப்பு
Recommended image3
அதிகாலையிலேயே தலைநகர் சென்னையில் பதற்றம்! ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
Related Stories
Recommended image1
₹56,100 சம்பளத்தில் இளைஞர்களுக்கு ஜாக்பாட்: இந்திய கடற்படையில் SSC எக்ஸிகியூட்டிவ் (IT) வேலை - மிஸ் பண்ணாதீங்க!
Recommended image2
மத்திய அரசில் வேலை பார்க்க ஆசையா? கல்வி தகுதி 10-ம் வகுப்பு போதும்! 107 காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹78,800 வரை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved