MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திரைப்பட இயக்குனர் மோகன் ஜியை சுற்றி வளைத்த போலீஸ்.? கைதுக்கான காரணம் என்ன?

திரைப்பட இயக்குனர் மோகன் ஜியை சுற்றி வளைத்த போலீஸ்.? கைதுக்கான காரணம் என்ன?

திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜியை போலீசார் இன்று காலை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Sep 24 2024, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

இயக்குனர் மோகன் ஜி திரைப்படங்கள்

பிரபல தமிழ் பட இயக்குனர் மோகன் ஜி, இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்த திரைப்படங்களில் பெண் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும், நாடகக் காதல்களையும் விமர்சித்து படத்தை இயக்கியுள்ளார். இவரது திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து நிலையில் தொடர்ந்து பாமக ஆதரவாளராகவே தன்னை காட்டிக் கொண்டு வந்தார். இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜியை  போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

23

பாஜக குற்றச்சாட்டு

பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள பதிவில், சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை.  

திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.  கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது என தெரிவித்திருந்தார். 

33
Mohan G

Mohan G

கைதுக்கான காரணம் என்ன.?

இந்தநிலையில் இயக்குனர் மோகன்ஜியை வீடியோ பதிவு ஒன்றில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்னை காசிமேடு இல்லத்தில் இருந்து இன்று காலை திருச்சி போலீசார் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதும் கைதுக்கான முழுமையான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image2
தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் அறிவிப்பு
Recommended image3
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved