- Home
- Tamil Nadu News
- ஷாக்கிங் நியூஸ்! ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ந்தவர் சென்னையில் சிக்கினார்!
ஷாக்கிங் நியூஸ்! ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ந்தவர் சென்னையில் சிக்கினார்!
தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அதிகாலையில் அதிர்ச்சி! ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ந்தவர் சென்னையில் சிக்கினார்!
தீவிரவாத செயல்களை தடுக்கவும், வெளிநாட்டில் உள்ள தடை செய்யப்பட்ட இயங்கங்களுக்கு ஆதரவாகவும் ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுபவர்களின் வீடுகளில் அவ்வப்போது தேசிய புலனாய்வு முகமை அமைப்பான என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனையின் போது செல்போன், கணிணி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சோதனை செய்யப்படும், அதில் தீவிரவாதத்தை ஊக்குவித்து கருத்துகளை வெளியிட்டிருந்தாலோ அல்லது குண்டு வெடிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு திட்டமிட்டிருந்தாலோ கைது செய்யப்படுவார்கள்.
National Investigation Agency
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் பகுதியில் இன்று அதிகாலை முதல் 15 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பானது.
ISIS
அப்பகுதியில் வசித்து வரும் பாசித், நபீன் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்த புகாரில் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலை சேர்ந்த அல் பாசித் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் மூளைச்சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
NIA Raids
பழைய வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நநடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆய்வு நிறைவடைந்த பின்னரே சோதனை குறித்த முழு விவரம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.