- Home
- Tamil Nadu News
- புதுக் கட்சி ஆரம்பிக்கும் காளியம்மாள்..? ரூட் போட்டுக் கொடுத்த பாஜக.. இபிஎஸ் எடுத்த இறுதி முடிவு..!
புதுக் கட்சி ஆரம்பிக்கும் காளியம்மாள்..? ரூட் போட்டுக் கொடுத்த பாஜக.. இபிஎஸ் எடுத்த இறுதி முடிவு..!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்குற ஏராளமான பெண்களை காளியம்மாள் இணைத்து வருகிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கலாம் எனக் கூறப்பட்டது.

வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். அப்போது நடக்கும் பிரச்சார கூட்டத்தில் சிறப்புரையாற்றுவார். இந்த மேடையில் அதிமுக, பாஜக இறுதி கூட்டணி பற்றி அறிவிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக அதிமுக- பாஜக கூட்டணி தலைவர்கள் எல்லாரும் பிரதமர் மோடியுடன் மேடையில் கைகோர்த்து நிற்கும்படி தமிழக பாஜக ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மேடையில நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாளும் பங்கேற்க இருக்கிறார்.
சீமானுடைய நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விளக்கப்பட்டு ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகி விட்டது. காளியம்மாள் தன்னுடைய அரசியல் களம் பற்றி முடிவெடுக்காமல் இருந்து வந்தார். இது குறித்து நிருபர்கள் கேட்கும்போதெல்லாம் நிச்சயமாக ஒரு கட்சியில் சேர்வேன். அதைப் பற்றி பத்திரிகையாளர்கள் முன் அறிவிப்பு வரும் என்று கூறி வந்ந்தார். இதற்கிடையே அவரு முதல் கட்டமாக, அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார், அந்த பேச்சுவார்த்தைக்கு முன் தவெகவுடனும் பேசுவார்த்தை நடத்தினார். ஆனால் காளியம்மாளுடைய வருகையை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தடுத்து நிறுத்திட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி பாஜக மேலிடத்தில் இருந்து காளியம்மாளுக்கு அழைப்பு வந்துள்ளது. அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காளியம்மாள் தரப்பில் தனக்கு நாகப்பட்டினம் தொகுதியை ஒதுக்கி தர வேண்டும். அது மட்டுமின்றி பாஜகவில் முக்கிய பதவியும் தர வேண்டும் என சில கோரிக்கைகளை வைத்ததாகக் கூறப்பட்டது. இதை பாஜக மேலிடம் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. அதே சமயத்தில் காளியம்மாளுக்கு புதுவிதமான யோசனை ஒன்றும் தெரிவிக்கப்பட்டது. காளியம்மாள் மட்டும் தனியாக பாரதிய ஜனதா கட்சியில் இணைவதைவிட புதிதாக ஒரு அமைப்பை தொடங்கி அதன் மூலம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணையலாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அதன் பெயரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்குற ஏராளமான பெண்களை காளியம்மாள் இணைத்து வருகிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மோடி நிறைய உத்தரவுகளை பரப்பித்து இருக்கிறார். அந்த வகையில தமிழ்நாட்டில ஏற்கனவே இருந்த கூட்டணி தவிர, புதிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து தேர்தலை சந்திக்க வேண்டும். நான் சென்னைக்கு வரும்போது கூட்டணி இறுதி முடிவு செய்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில உள்துறை அமைச்சர் அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக காளியம்மாள் புதிய அமைப்பை தொடங்குவதை கைவிட்டு, பாஜகவில் இணையாமல், இன்று மாலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
