- Home
- Tamil Nadu News
- 73 பேருடன் சென்ற இண்டிகோ விமானத்தில் கோளாறு! பதறிய பயணிகள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
73 பேருடன் சென்ற இண்டிகோ விமானத்தில் கோளாறு! பதறிய பயணிகள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் 73 பேருடன் புறப்படும்போது திடீர் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில் மற்ற 241 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தை அடுத்து விமானத்தில் செல்வதற்கே பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனே செல்கின்றனர். மேலும் அவ்வப்போது விமானங்கள் விபத்து மற்றும் கோளாறு தொடர்பான செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சென்னையில் இருந்து 68 பயணிகள் உட்பட 73 பேருடன் இண்டிகோ விமானம் திருச்சிக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட தயாரான போது விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி உணர்ந்தார்.
இதை அறிந்த விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விமானத்தை ஓடுபாதையிலேயே விமானி நிறுத்தினார். இதனால் புற்பட்ட சில நிமிடங்களில் விமானம் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், எந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு 1 மணிநேர தாமதத்திற்குப்பின் விமானம் 6.45 மணியளவில் திருச்சி புறப்பட்டது. காலதாமதத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.