TN Heavy Rain Alert: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுது! லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலூர், அரியலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தென் மாவட்டம், வட மாவட்டம் என தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது நேற்று விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: வார்டன்களாகும் ஆசிரியர்கள்! கல்வி அமைச்சருக்கு தெரியாமல் முடிவை எடுத்தது யார்? கேள்வி கேட்பது யார் தெரியுமா?
மேலும் கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், 19 முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கொடுக்கும் மத்திய அரசு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! இதோ முழு விவரம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.